புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மீண்டும் ராயப்பனாக மாறும் விஜய்.. லோகேஷ் கனகராஜ் காட்டும் அதிரடி!

தளபதி 66 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி வைரலான நிலையில் தளபதி 67 படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

விஜய்யின் பிறந்தநாளன்று வாரிசு திரைப்படத்தின் மூன்று போஸ்டர்களில் விஜய்யின் கெட்டப் வெளியாகி ரசிகர்ளிடம் வைரலானது. இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டும் அன்றே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்டேட் வராமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இதனிடையே தற்போது தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்கப்போகும் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆக்சன், மாஸாக உருவாக உள்ள இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் 60 வயது மதிக்கத்தக்க நபராக நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்தில், விஜய் ராயப்பன் கதாபாத்திரத்தில் தந்தையாக நடித்தும், மாஸான கேங்ஸ்டராகவும் நடித்திருப்பார். இந்த கதாப்பாத்திரத்திற்கென தற்போது வரை தனி ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தில், மீண்டும் ராயப்பன் கதாபாத்திரம் போல ஒரு கெட்டப்பில் நடிகர் விஜய்யை காட்டவுள்ளத ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் ஆயத்தமாகி வருகிறார்.

ஏற்கனவே நடிகர் விஜய்யின் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி லோகேஷ் கனகராஜ் ஹிட் கொடுத்த நிலையில் தளபதி 67 படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த வருடத்திலேயே தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Trending News