விஜய் இல்லனா என்ன நம்ம கைல பெரிய தலயே இருக்கு! பிரபல நடிகையை தாஜா பண்ணும் நெல்சன்

beast
beast

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் நெல்சன் திலிப்குமார் மிகக்குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது.

டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரியங்கா அருள் மோகனை கதாநாயகியாக நெல்சன் அறிமுகம் செய்து வைத்தார். இப்படத்தில் அவரது நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறிய பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயன் அடுத்த படமான டான் படத்திலும் நடித்து வருகிறார்.

பாண்டியராஜன் இயக்கி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்த வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் பிசியாக உள்ளார்.

நெல்சன் தற்போது இயக்கிவரும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனை நடிக்க வைக்க நெல்சன் ஆசைப்பட்டார். ஆனால் அவர் பல முயற்சிகள் செய்தும் பீஸ்ட் படத்தில் பிரியங்கா மோகனை நடிக்க வைக்க முடியவில்லை. அதன் பிறகு பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமானார்.

நெல்சன் பீஸ்ட் படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்க உள்ளார். இப்படத்திலாவது கண்டிப்பாக பிரியங்கா மோகனை நடிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம் நெல்சன். விஜய்யுடன் நடிக்க முடியவில்லை என்றால் என்ன சூப்பர்ஸ்டாருடன் கண்டிப்பாக நடிக்க வைக்கிறேன் என்று பிரியங்கா மோகனிடம் வாக்கு கொடுத்திருக்கிறாராம் நெல்சன்.

Advertisement Amazon Prime Banner