Connect with us

Cinemapettai

சன் பிக்சர்ஸ் செய்த கூறுகெட்ட வேலையால் கடுப்பான விஜய்.. தொங்கலில் தளபதி65

thalapathy65

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சன் பிக்சர்ஸ் செய்த கூறுகெட்ட வேலையால் கடுப்பான விஜய்.. தொங்கலில் தளபதி65

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலியமாக தளபதி 65 என பெயர் வைத்துள்ளனர். மேலும் இந்த படத்தை டாக்டர் மற்றும் கோலமாவு கோகிலா போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலிப் குமார் என்பவர் இயக்குகிறார்.

தற்போது நெல்சன் ரஷ்யாவில் தளபதி65 படத்தின் லொக்கேஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதியில் தளபதி 65 படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த நேரத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி விஜய்யை தேவையில்லாமல் கோபப்படுத்தியுள்ளதாம். முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தாங்களாகவே முன்வந்து நண்பன் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

thalapathy65-cinemapettai

thalapathy65-cinemapettai

ஆனால் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட முன் ஏற்பாடுகளுக்கு வரும்போது எப்போதுமே மது அருந்திக் கொண்டு வருகிறாராம். மேலும் 24 மணி நேரமும் அவர் மது அருந்திவிட்டு வேலை செய்வதை கேட்ட விஜய் கடுப்பாகி விட்டாராம்.

ஏற்கனவே விஜய் பெயரை கெடுக்க நிறைய பேர் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் தளபதியை மிகவும் டேமேஜ் செய்துவிடும். இதன் காரணமாக படக்குழுவினர் வாயிலாக தளபதி விஜய் அந்த ஒளிப்பதிவாளருக்கு எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது.

இது தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர். இதனால் ஒளிப்பதிவாளரை மாற்றலாமா என விஜய்யிடம் கேட்டதற்கு வேலை செய்யும் போது இந்த மாதிரி பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்பதை மட்டும் தெரிவித்து விடுங்கள் என கூறியுள்ளதாக தெரிகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top