3 ஹீரோயின்களை ரிஜெக்ட் செய்த விக்னேஷ் சிவன்.. நயன்தாரா மார்க்கெட்டை பிடிக்க செய்யும் நரித் தந்திரம்

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் சில வருடங்கள் கழித்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். கடந்த வருடம் வெளிவந்த அந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கும் இவர் அடுத்ததாக அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் அந்த திரைப்படம் பற்றிய அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் அஜித் விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார். ஆனால் இந்த படத்தில் நடிக்கப் போகும் கதாநாயகிக்கான பேச்சுவார்த்தை இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

Also read: துணிவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறும் வாரிசு.. நாளை ட்ரெய்லரில் இருக்கும் உள்குத்து

அந்த வகையில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ராகுல் ப்ரீத் சிங், திரிஷா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் இவர்கள் யாரையும் தேர்வு செய்யவில்லையாம். அதேபோன்று இன்னும் சில ஹீரோயின்களிடமும் பட குழு பேசி இருக்கிறது. அதையும் விக்னேஷ் சிவன் ரிஜெக்ட் செய்திருக்கிறார்.

இப்படியே இழுத்துக் கொண்டே போன இந்த விஷயம் தற்போது நயன்தாராவில் வந்து முடிந்திருக்கிறது. அதாவது விக்னேஷ் சிவன் அஜித்துக்கு ஜோடியாக தன் மனைவியை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம். ஏற்கனவே அஜித், நயன்தாரா இருவரும் பில்லா, ஏகன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். அதிலும் இவர்கள் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த விசுவாசம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

Also read: நயன்தாரா திமிரை எல்லாம் மிஞ்சிய திமிரு.. சி.எம் தோரணையில் புது நடிகை

அதைத்தொடர்ந்து இந்த ஜோடி மீண்டும் இணைய இருக்கின்றனர். இது கிட்டத்தட்ட உறுதியான தகவலாக இருக்கிறது. ஏற்கனவே இந்த கதாபாத்திரத்திற்கு த்ரிஷாவை நடிக்க வைக்க முயற்சி நடந்தது. திரிஷாவும் அதற்கு ஓகே சொல்லி இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் தளபதி 67 திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு வந்தது.

இந்த இரு வாய்ப்புகளையும் ஒரே நேரத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் திரிஷா தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார். அதனாலேயே இப்போது நயன்தாரா இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். அது மட்டுமல்லாமல் கடந்த வருடம் அவரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் பெரிய அளவில் போகவில்லை. இதனால் சரிந்து போயிருந்த மனைவியின் மார்க்கெட்டை உயர்த்துவதற்காகவே விக்னேஷ் சிவன் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாராம்.

Also read: இப்ப தெரியுதா நான் ஏன் லேடி சூப்பர் ஸ்டார்ன்னு.? கெத்தாக பேசி வாய்விட்டு மாட்டிய நயன்தாரா

- Advertisement -