திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

ஒட்டுமொத்தமாக சொதப்பிய விக்கி.. நயன்தாராவின் 25 கோடி கல்யாண ப்ளான் இதனாலதான் போச்சாம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு வழியாக தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். பல வருடங்களாக அவருடைய ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து வந்த அவரின் திருமணம் கடந்த மாதம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

அதில் நயன்தாரா என்ன மாதிரியான உடை அணிந்திருப்பார், திருமண நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் வந்திருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். ஆனால் நயன்தாராவோ ஏகப்பட்ட கெடுபிடிகள் மற்றும் கட்டுப்பாட்டுகளுடன் தன்னுடைய திருமணத்தை ரகசியமாக நடத்தி முடித்து விட்டார்.

பத்திரிக்கையாளர்கள் கூட அவருடைய திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை. அந்த அளவுக்கு நயன்தாரா திருமணம் குறித்த எந்த விஷயங்களும் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். இதெல்லாம் எதற்கு என்று பலரும் குழம்பி வந்த நிலையில் அதற்கு பின்னால் இருந்த நயன்தாராவின் மாஸ்டர் பிளான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

எதையும் பிசினஸாக பார்க்கும் நயன்தாரா தன்னுடைய திருமணத்தை கூட பல கோடி ரூபாய்க்கு பிசினஸ் செய்துவிட்டது தான் பலரின் ஆச்சரியத்திற்கும் காரணம். திருமண நிகழ்வுகள் அனைத்தையும் ஒளிபரப்பும் உரிமையை அவர் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு அளித்திருந்தார்.

மேலும் இதற்காக 25 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமும் செய்யப்பட்டது. இதனால் நயன்தாராவின் ரசிகர்கள் பலரும் அந்த நிகழ்வுகளை காண்பதற்கு மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையில் இன்னும் அவரின் திருமண வீடியோ எதுவும் வெளியாகவில்லை.

அதற்கு பதிலாக சில நாட்களுக்கு முன் விக்னேஷ் சிவன் சில முக்கிய போட்டோக்கள் அனைத்தையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டார். இதைப் பார்த்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்போது பின்வாங்கி உள்ளது. அது மட்டுமல்லாமல் பண விஷயத்தை முடிவு செய்வதிலும் சில நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ரசிகர்களுக்கு அந்த வீடியோவை பார்க்கும் ஆர்வமே போய்விட்டது.

இதனால் தற்போது நயன்தாரா போட்டு வைத்த ஒட்டுமொத்த திட்டமும் தவிடு பொடியாக்கி விட்டது. அதாவது நயன்தாரா தன் திருமணத்தை எந்த செலவும் இல்லாமல் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கொடுக்கும் 25 கோடியை வைத்து சரி கட்ட நினைத்திருந்தார்.

ஆனால் விக்னேஷ் சிவன் செய்த செயலால் அவருக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்போது திருமண செலவு மொத்தத்தையும் நயன்தாராவே ஏற்க வேண்டிய சூழல் இருப்பதால் அவர் தன் கணவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

- Advertisement -

Trending News