ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பழசை மறந்த விக்னேஷ் சிவன்.. அஜித்துக்கு ஆறுதல் சொல்லி போட்ட பதிவு

அஜித்தின் தந்தை சுப்பிரமணியன் நேற்று மறைந்ததை ஒட்டி பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வந்திருந்தனர். அந்த வகையில் ஏ ஆர் முருகதாஸ், மகிழ்திருமேனி போன்ற பிரபலங்கள் அஜித்தின் வீட்டிற்கு சென்று அவரது தந்தைக்கு மரியாதையை செலுத்தி வந்தனர். மேலும் சினிமா துறையை சார்ந்த பல பிரபலங்கள் நேரில் சென்று இருந்தனர்.

இந்நிலையில் இணையத்தில் மிகப்பெரிய சண்டை அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சில காலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள் தான் எங்கள் பெயரைச் சொல்லி அடித்துக் கொள்கிறீர்கள் நாங்கள் நண்பர்கள் தான் என நிரூபிக்கும் விதமாக விஜய் அஜித்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியிருந்தார்.

Also Read : அஜித் அறிமுகப்படுத்திய 6 இயக்குனர்கள்.. திருப்புமுனையை ஏற்படுத்திய ஏ ஆர் முருகதாஸ்

மேலும் சமூக வலைத்தளங்களிலும் பல பிரபலங்கள் அஜித்தின் தந்தை மறைவுக்கு வருந்தி பதிவு போட்டிருந்தனர். இதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு ரசிகர்களை நெகிழ செய்தது. அதாவது ஏகே 62 படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால் விக்னேஷ் சிவனின் கதை பிடிக்காத காரணத்தினால் அவருக்கு பதிலாக மகிழ்திருமேனியை படக்குழு நியமித்து உள்ளது. இதனால் அஜித் மீது விக்னேஷ் சிவனுக்கு சற்று வெறுப்பு உள்ளதாக கூறப்பட்ட வந்தது. ஆனால் நேற்றைய தினம் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் அஜித் சார் எப்போதுமே தனது பெற்றோர் மீது கொண்டிருக்கும் அன்பு அளவு கடந்தது.

Also Read : தந்தையை இழந்த நடிகர் அஜித்.. நேரில் சென்று ஆறுதல் சொன்ன தளபதி விஜய்

இப்போது அஜித்தின் தந்தை சுப்பிரமணியனின் இழப்பு அவரால் தாங்க முடியாத ஒன்று. அஜித்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் அளவிற்கு சக்தியை கொடுக்குமாறு இறைவனை பிரார்த்தித்துக் கொள்வதாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

என்ன தான் அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்குள் கருத்துவேறு பாடு இருந்தாலும் பழசை மறந்து இவ்வாறு பதிவிட்டுள்ளது அவருடைய நல்ல மனதை காட்டுகிறது. மேலும் ஏகே 62 படம் இல்லை என்றாலும் ஒரு படம் மூலம் மீண்டும் விக்னேஷ் சிவன் ரசிகர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கலாம்.

vignesh-shivan

Also Read : அப்பா சென்டிமென்டில் கண்கலங்க வைத்த அஜித்தின் 5 படங்கள்.. தாரை தாரையாக கண்ணீர் வரச் செய்த விசுவாசம்

- Advertisement -

Trending News