கல்யாணம் செய்துகொண்ட வித்யூலேகா.. கணவருடன் வெளியான புகைப்படம்

கொரனா ஊரடங்குகளால் பல்வேறு பிரபலங்களின் திருமணமும் திடீர் திடீரென நடந்தேறி வருகிறது.

நடிகர் மோகன் ராமின் மகளும் நடிகையுமானவர் வித்யூலேகா. சப்பி கண்ணங்கள் கொழு கொழு உடல் என நீதானே என் பொன் வசந்தம் என்ற கௌதம் மேனனின் படைப்பில் சமந்தாவின் தோழியாக அறிமுகமானார்.

என்னதான் குடும்ப பின்னணி இருந்தாலும் தானாக முயற்சித்து தான் பீல்டுக்குள் ஒரு பெயரை சம்பாதிக்கவும் செய்தார் வித்யு. அந்த ஆண்டில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நீ தானே என் பொன் வசந்தம் படத்தின் சமந்தாவின் தோழி கேரக்டருக்கு பொருந்தியிருந்தார்.

தொடர்ந்து காக்கி சட்டை, மாசு, ஜில்லா, வீரம், மாலினி 22 பாளையங்கோட்டை, தீயா வேலை செய்யனும் குமாரு, இனிமே இப்படித்தான், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, புலி, வேதாளம், மாப்ள சிங்கம், வாகா, மீண்டும் ஒரு காதல் கதை, சரவணன் இருக்க பயமேன், பாகமதி, பஞ்சுமிட்டாய், 7 என தமிழிலும் சில தெலுங்கு கன்னட படங்களும் என மொத்தம் 50 படங்களுக்கும் மேல் நடித்து காமெடி குயினாக தனக்கென்ற ஒரு சரியான அடையாளத்தோடு வலம் வந்தவர்.

vidyullekha
vidyullekha

திடீரென உடல் கட்டுப்பாட்டில் குதித்து ஒர்க் அவுட்களை அடித்து நொறுக்கி புகைப்படங்களை வெளியிட்டும் வந்தார் வித்யு.

இப்போதும் கூட கைவசம் ஐந்து தெலுங்கு படங்களுடன் பிசியாக வலம் வந்த அம்மணிக்கு திருமண ஆசை வரவே தான் காதலித்து வந்த சஞ்சய் என்பரை பற்றி தன் குடும்பத்தினரிடம் மனம் திறந்திருக்கிறார் வித்யு .

குடும்பத்தினரும் பச்சைக்கொடி காட்ட போன வருடம் ஆகஸ்டு 26ஆம் தேதி இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தேரியது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று நல்லபடியாக வித்யுவின் திருமணம் கிழக்கு கடற்கறை சாலை பகுதியில் நடந்தேரியது. ஊரடங்கு தளர்வு கட்டுப்பாடுகளுடன் குறைந்த நபர்களுடன் சுபநிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டது. வித்யுலேகா ராமன் வித்யுலேகா சஞ்சயாகிவிட்டார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்