அர்ஜுனாள் விடாமுயற்சி படத்துக்கு வந்த தடை.. ஈகோவால் மொத்த டீமும் படும் பாடு

Vidaamuyarchi Stopped: விடாம முயற்சி சூட்டிங் நடப்பதே பெரிய குதிரைக் கொம்பாக இருக்கிறது. சூட்டிங் தடைபட்டதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், இந்த முறை முக்கியமான காரணத்தை தன் மீது சுமத்தியுள்ளார் ஆக்சன் கிங் அர்ஜுன். ஒரு மாதம் படப்பிடிப்பில் இருந்து விலகி உள்ளார் அர்ஜுன்.

இந்த படத்தில் அஜித், ஆரவ், அர்ஜுன், திரிஷா,அர்ஜுன் தாஸ், பிரியா பவானி சங்கர், ரெஜினா கசான்ற என ஏகப்பட்ட ஆர்டிஸ்ட்டுகள். இவர்கள் அனைவரும் ஒரு சேர வந்தால் தான் ஷூட்டிங் நடைபெறும். இந்த படத்தில் இவர்களுக்குள் நிறைய காம்பினேஷன் காட்சிகள் இருக்கின்றதாம் .

விடாமுயற்சி டிமில் அத்தனை ஆர்டிஸ்டிகளுக்குள் யாரும் பேசிக் கொள்வதே கிடையாதாம். ஒவ்வொருத்தரும் படப்பிடிப்பிற்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு வேலையில் பிஸியாக இருக்கிறார்கள். இவர்களுக்குள் ஈகோ பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. இதனால் இந்த படத்துக்கு சரியான ஒரு புரிதல் இல்லாமல் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

ஈகோவால் மொத்த டீமும் படும் பாடு

அர்ஜுன் இந்த மாதம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் வேண்டாம் என கூறியுள்ளார். அர்ஜுன் நிறைய காம்பினேஷன் காட்சிகளில் நடிக்கிறார். அதனால் இப்பொழுது ஷூட்டிங் தடைப்பட்டு நிற்கிறது. ஏற்கனவே நிதி பிரச்சனை, ஆர்டிஸ்ட் கால்ஷீட் பிரச்சனை என தவித்து வந்த விடாமுயற்சிக்கு இப்பொழுது அர்ஜுனாள் ஒரு மாதம் லீவு கிடைத்துள்ளது.

அர்ஜுன் வீட்டில் விரைவில் டும் டும் டும் சத்தம் கேட்கப் போகிறது. அவரின் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இவ்விருவர்களுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதனால் அர்ஜுன் கல்யாண வேலைகளுக்காக ஒரு மாசம் ஷூட்டிங்கிற்கு பிரேக் கேட்டுள்ளார்.

திருமணம் இந்த மாதம் ஜூன் 10 ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது . முக்கியமான திரை பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டனர். ஏற்கனவே ஃப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி ஏழாம் தேதியே முடிந்துவிட்டது. அர்ஜுன் ஒரு தீவிர அனுமன் பக்தர் அதனால் சென்னையில் உள்ள அனுமன் கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -