திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

வரம் கிடைச்சாலும் தொடர்ந்து விடாமுயற்சிக்கு வரும் வம்பு.. ஸ்லோவா ஸ்டெடியா விழுந்த மரண அடி

Vidaamuyarchi- Ajithkumar: எந்த நேரத்தில் இந்த படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைத்தார்களோ தெரியவில்லை, இதுவரைக்கும் படம் ரிலீஸ் ஆவதற்கான எந்த முயற்சியும் எடுத்த பாடில்லை. ஒரு வருடமாக படப்பிடிப்பு எப்போ தொடங்கும் எனக் கூட தெரியாமல் தான் இருந்தது. இயக்குனரை தேர்வு செய்ய ஒரு போராட்டம், படத்தின் டைட்டிலை அறிவிக்க ஒரு போராட்டம் என போர்க்களமாக மாறிவிட்டது அஜித்தின் 62 ஆவது படம்.

ரஜினி, கமல், விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அடுத்தடுத்து தங்கள் படங்களின் அப்டேட்டுகளை வரிசையாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த வருடம் ரிலீஸ் ஆன துணிவு படத்திற்கு பிறகு இதுவரை அஜித் பக்கத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் ரொம்பவே நொந்து போயிருந்தார்கள்.

சமீபத்தில் சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரனிடம் பத்திரிக்கையாளர்கள் விடாமுயற்சி படத்தைப் பற்றி கேள்வி கேட்ட பொழுது அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி துபாய் நாட்டின் அஜர்பைஜான் பகுதியில் படப்பிடிப்பும் தொடங்கியது.

படப்பிடிப்பு தொடங்கிய பத்தே நாளில் பெரிய பிரச்சனை ஒன்று உருவாகி இருக்கிறது. இஸ்ரேல் பாலஸ்தீன் நாடுகளின் பிரச்சனையில் இப்போது போர் தொடங்கி விட்டது. அந்தப் போரின் தாக்கம் அண்மை நாடுகளிலும் அதிகமாக தெரிகிறது. இதில் துபாயும் ஒன்று. எனவே அந்த அரசு முக்கியமான முடிவை எடுத்து இருக்கிறது.

போரை கருத்தில் கொண்டு துபாய் அரசாங்கம் விமான போக்குவரத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் அந்த நாட்டுக்கு டூரிஸ்ட் ஆக சென்றிருக்கும் மக்களை உடனே அவர்களுடைய நாட்டிற்கு திரும்ப சொல்லி இருக்கிறது. இதனால் விடாமுயற்சி படக்குழு கண்டிப்பாக நாடு திரும்பியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தான் இருக்கிறது.

படப்பிடிப்பை நிறுத்திவிட்டு விரைவில் விடாமுயற்சி படக்குழு இந்தியா திரும்புகிறது. நிலைமை சீரானதும் மீண்டும் துபாய் சென்று படப்பிடிப்பை தொடங்குவார்களா அல்லது ஏற்கனவே இந்த படம் ஜவ்வாய் இழுத்து விட்டதால் ஒரே முடிவாக எடுத்து இங்கேயே செட் போட்டு படப்பிடிப்பை தொடங்குவார்களா என்ற தகவல் இனிதான் தெரிய வரும்.

- Advertisement -

Trending News