வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

தினுசு தினுசாக விடாமுயற்சி படப்பிடிப்புக்கு வரும் பிரச்சனை.. இதுக்கு பேசாம பருத்தி முட்டை குடோன்ல இருந்திருக்கலாம்

Ajith in Vidamuyarchi: சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினையில் சிக்கிக் கொண்டே தான் இருக்கிறார்கள். அந்த வகையில் அஜித்துக்கு மட்டும் பிரச்சனை வேறொரு வழியாக வருகிறது. அதாவது இந்த வருட துவக்கத்திலேயே அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படம் தாறுமாறான வெற்றி அடைந்து மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவருடைய அடுத்த படத்திற்கான அப்டேட்டுகளை கொடுத்தார்.

ஆனால் அப்போது இருந்து இப்போது வரை அந்தப் படத்திற்கு ஒரு விடிவு காலமே இல்லாமல் இடியாப்ப சிக்கலில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அதாவது மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்துடன் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். ஆனால் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு சுமார் எட்டு மாதங்களாக ஆனது. தற்போது ஒரு வழியாக எல்லா பிரச்சனையும் முடிந்த நிலையில் நல்ல நேரம் கை கூடியது.

அந்த வகையில் மொத்த படக் குழுவும் படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். ஆனால் மறுபடியும் இதில் ஒரு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதாம். அதாவது படப்பிடிப்புக்கு அஜித் தினமும் 2மணி நேரம் கழித்து தாமதமாகி வருகிறாராம். இதனால் சூட்டிங் தினமும் லேட்டா தான் ஆரம்பிக்கிறார்களாம்.

இப்படியே போனால் படம் இப்போதைக்கு ரிலீசாகாது போல் தெரிகிறது. ஆனால் அஜித் லேட்டா வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர் உடம்பில் உள்ள பிரச்சினை தான் என்று கூறுகிறார்கள். அதாவது அங்குள்ள கிளைமேட்டுக்கு அவருடைய உடம்பு ஒத்துழைப்பு தராததால் ரொம்பவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.

இந்த விஷயம் தெரிந்தால் படக்குழு சைடுல இருந்து எதுவும் சொல்ல முடியாமல் அஜித் இஷ்டம் போலயே படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் சூட்டிங் ஆரம்பித்தாலும் ஜவ்வு மாதிரி தான் ஒவ்வொரு நாளும் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் இப்போதைக்கு விடாமுயற்சி படம் ரிலீசுக்கு தயாராக போவதில்லை.

அத்துடன் இதுக்கு பேசாம அஜித் கொஞ்ச காலங்கள் ரெஸ்ட் எடுத்த பின்பே நடிக்க வரலாம் என்றும் ஒரு சில பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. எந்த நேரத்தில் அஜித் விடாமுயற்சி படத்தில் கமிட் ஆனாரோ, ஒவ்வொரு நாளும் தினுசு தினசாக தான் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. எப்படியாவது வெளிநாட்டு சூட்டிங்கை முடித்து விட வேண்டும் என்று மொத்த படக்குழுவும் போராடி வருகிறார்கள்.

- Advertisement -

Trending News