அட நம்புங்கப்பா உண்மை தான்.. விடாமுயற்சி ஷூட்டிங் எங்க, எப்ப ஆரம்பிக்குது தெரியுமா?

Vidaamuyarchi-Ajith: எந்த நேரத்துல விடாமுயற்சின்னு பேரு வச்சாங்களோ தெரியல ஷூட்டிங்கை ஆரம்பிக்க மொத்த டீமும் முயற்சி எடுத்துக்கிட்டு தான் இருக்காங்க. ஆனா அதுக்கான வாய்ப்பு தான் இன்னும் அமையல. எப்பவோ ஆரம்பிச்சு ரிலீசுக்கு தயாராகி இருக்க வேண்டிய இப்படம் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே படம் ஆரம்பிக்கப் போகிறது என செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் தான் நொந்து நூலாகி போயிருக்கின்றனர். அவரே வந்து சொன்னால் கூட இனிமேல் நம்புவார்களோ என்னவோ தெரியவில்லை.

Also read: அஜித்தின் அம்மா மருத்துவ செலவுக்கு உதவாத தயாரிப்பாளர்.. பழசை மறக்காத ஏகே

ஆனால் இந்த மாத இறுதியில் அல்லது அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விடாமுயற்சி பட ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என உறுதியான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்களாம்.

த்ரிஷா அஜித்துக்கு மனைவியாக நடிக்க இருப்பது ஏற்கனவே தெரியும் என்றாலும் மற்றொரு நாயகியாக ஹூமா குரேஷியும் இப்படத்தில் இணைந்திருக்கிறாராம். மிக முக்கியமான கதாபாத்திரம் என்பதால் அவர் இதில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

Also read: அஜித்தை விட 6 மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கிய விஜய்.. அதைக் கூட கொடுக்காமல் ஏமாற்றிய தயாரிப்பாளர்

மேலும் இப்படத்தின் ஷூட்டிங் துபாயில் ஆரம்பிக்க போகிறது என்று முன்னரே செய்திகள் வெளிவந்தது. அந்த வகையில் த்ரிஷா இப்போது அங்கு தான் சுற்றுலாவுக்கு சென்றிருப்பதால் நேரடியாக படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறாராம்.

அஜித்துக்கும் அங்கு சொந்த வீடு இருப்பதால் அங்கு இருந்தபடியே நடித்துக் கொடுக்க இருக்கிறார். இப்படி அனைத்து வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருவதால் இந்த முறை மிஸ் ஆகாது என்கிறது திரையுலக வட்டாரம். இருப்பினும் அஜித் ரசிகர்கள் இதை நம்புவதா வேண்டாமா என்ற சந்தேகத்துடன் தான் இருக்கின்றனர்.

Also read: அஜித் வீட்டு சிசிடிவி கேமராவில் முகத்தை காட்டினேன்.. உதவி கிடைக்காமல் அல்லாடும் நடிகர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்