பிரதீப் மேல் விசித்ராவுக்கு இருக்கும் வயித்தெரிச்சல்.. சமயம் பார்த்து வைத்த ஆப்பு, கிளம்பிய எதிர்ப்பு

Biggboss 7-Pradeep-Vichitra: பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடிக்க தொடங்கியிருக்கும் வேளையில் ஒவ்வொருவரின் முகத்திரையும் கிழிய ஆரம்பித்து இருக்கிறது. அதிலும் சில போட்டியாளர்கள் தங்களுக்கு இருக்கும் விருப்பு வெறுப்புகளை வெளிப்படையாகவே காட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் ஆட்டமே தற்போது வேறு திசைக்கு பயணித்து வருகிறது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பானாலும் 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் நம்மால் கண்டுகளிக்க முடியும். அதன்படி இப்போது லைவில் நடந்த ஒரு விஷயம் தான் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதாவது இந்த வாரம் போட்டியாளர்களுக்கு லைக், டிஸ்லைக் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதில் குடும்ப உறுப்பினர்கள் பேசிய வீடியோக்களை பார்த்து அவர்களுடைய கருத்து சரியாக இருக்கிறது என்றால் லைக் கொடுக்க வேண்டும். அதுவே முரண்பாடாக இருந்தால் டிஸ் லைக் கொடுக்க வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறார். அதில் விசித்ரா நிக்சனுக்கு லைக் கொடுக்கிறார். அதைத் தொடர்ந்து பலரும் எதிர்பார்த்தது போல் பிரதீப்புக்கு டிஸ்லைக் கொடுக்கிறார்.

அதற்கு அவர் கூறிய காரணத்தை கேட்ட ரசிகர்கள் கொந்தளித்து போய் இருக்கின்றனர். அதாவது பிரதீப் குடும்பத்தின் சார்பாக சிறு பிள்ளைகள் பேசி இருந்தனர். அதை குறிப்பிட்ட விசித்ரா குழந்தைகள் உண்மையை மட்டும் தான் பேசும். அதே சமயம் சொல்லிக் கொடுத்ததையும் பேசும். அதனால் அவர்கள் பேசியதே நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

அதேபோன்று பிரதீப் பல சமயங்களில் எரிச்சல் ஊட்டும் நபராக தான் இருக்கிறார். அதனால் என்னுடைய ஓட்டு நிக்சனுக்கு மட்டும்தான் என்று கூறியிருந்தார். இதை பார்க்கும் போதே அவர் பிரதிப்பை டார்கெட் செய்வதும் வன்மத்தை கக்குவதும் வெளிப்படையாக தெரிகிறது. ஏனென்றால் பலமுறை அவரை விசித்ரா கிறுக்கன் என்று சொல்லி இருக்கிறார்.

அது மட்டுமின்றி வார இறுதி நாளில் பிரதீப் காப்பாற்றப்படும் போது தன்னுடைய பிடித்தமின்மையை அவர் வெளிப்படையாகவே முகத்தில் காட்டி விடுவார். அப்படித்தான் இப்போதும் சமயம் பார்த்து ஆப்பு வைத்திருக்கிறார். இவை அனைத்திற்கும் ஒரே காரணம் மக்கள் மத்தியில் பிரதீப்புக்கு இருக்கும் ஆதரவு தான். ஆரம்பத்தில் அவர் செய்யும் சேட்டைகள் எரிச்சலை கிளப்பினாலும் போகப் போக அவருடைய குணம் ரசிகர்களுக்கு பிடித்து போய்விட்டது என்பதுதான் நிதர்சனம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்