கெடு கொடுத்து தலைவர்.. குறி வச்சா இரை விழணும், டாப் ஹீரோக்களை காலி பண்ண போகும் வேட்டையன்!

Vettaiyan Rajini is the hunter who is going to vacate the top heroes: “வயதானாலும் ஸ்டைலும் அழகும் உன்ன விட்டு போகவே இல்லை!” என்ற நீலாம்பரியின் வாக்குப்படி இளம் தலைமுறைக்கு டஃப் கொடுத்து நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த கால இளசுகளுடன் போட்டி போட்டு அவர்களுக்கு ஈடான வேகத்துடன் ஆக்சன், காதல், காமெடி என படத்திற்கு படம் கதையை அப்டேட் செய்து வசூலையும் அள்ளிக் குவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட 600 கோடியை கடந்து தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய சாதனை புரிந்தது.

இதன் தொடர்ச்சியாக லைகா, தலைவர் 170 படத்திற்காக ரஜினியை ஒப்பந்தம் செய்தது. ஜெய் பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் தலைவர்.

சமீபத்தில் வேட்டையன் போஸ்டர் வலைதளத்தில் வெளிவந்து அவரது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இன்றும் இளைஞர்கள் ரஜினியை “தலைவா” என்று கொண்டாடத்தான் செய்கிறார்கள்.

அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் தலைவரின் வேட்டையன்

படத்தின் ரிலீஸ்ஸின் போது  ஓவராக அலப்பறையை கிளப்பும் ரசிகர்களுக்கு முன்னறிவிப்பாக, வரும் அக்டோபர் மாதத்தில் வேட்டையன் படத்தை ரிலீஸ் செய்வது என்று தெரிவித்து உள்ளது தயாரிப்பு நிறுவனம்.

ஜெய் பீம் ஞானவேல் என்பதால் சமூக கருத்துடன் கூடிய பிரச்சனையை அலசுவது போலாக தரமான அரசியல் ஸ்டோரியா இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில்,

போஸ்டரை பார்த்து மீண்டும் கேங்ஸ்டர் ஸ்டோரி தான் என்பது போல் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ரெடி ஆகியுள்ளனர் ரசிகர்கள்.

அவர்களின் ஆர்வத்தினை பூர்த்தி செய்யும் வண்ணம் அக்டோபர் மாதம்  வேட்டையன் திரைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார் தலைவர்.

அக்டோபர் மாதம் ஆயுத பூஜையை முன்னிட்டு அல்லது எதிர்வரும் தீபாவளியின் தித்திப்பாக வேட்டையனை ரிலீஸ் செய்வது என முடிவெடுத்துள்ளார் ரஜினி. 

இந்த வருஷம் தீபாவளிக்கு தலைவர் செய்ய தரமான சம்பவம் செய்யப் போறார் என்று மட்டும் தெரிகிறது.

மேலும் அஜித்தின் விடாமுயற்சி, விஜய்யின் கோட் என  இந்த படங்களின் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகாத நிலையில் வேட்டையனின் ரிலீஸ் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்