சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சிம்புவின் பத்து தலயை ஒரே நாளில் முறியடித்ததா விடுதலை வசூல்.? ஹீரோவாக வேட்டையாடும் சூரி

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பவானி ஸ்ரீ, சேர்த்தன் ஆகியோர் நடித்த விடுதலை திரைப்படம் நேற்று ரிலீசானது. இந்த படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்களையும் பெற்றிருக்கிறது. பல சினிமா பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்த படத்திற்கு சினிமா ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. நான்கு வருட காத்திருப்புக்குப் பின்பு இந்த படம் வெள்ளித்திரையில் ரிலீஸ் ஆகி வெற்றி கண்டிருக்கிறது. நேற்றிலிருந்து இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விடுதலைப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

Also Read:சூரியின் நடிப்பில் மிரட்டிய விடுதலை.. ரெண்டு மணி நேரத்தில் ஹார்ட் பீட்டை எகிற செய்த கதைக்களம்

இந்த ஆர்வத்திற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் காமெடி நடிகர் சூரி முதன் முதலில் ஹீரோவாக நடித்த விடுதலை திரைப்படத்தை படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் ரொம்பவும் தைரியமாக நடிகர் சிம்புவின் 10 தல படத்துடன் மோத விட்டிருப்பது தான். சிம்புவா அல்லது சூரியா என்ற கேள்வி தான் இப்போது சினிமா ரசிகர்களுக்கு பெரிதாக இருக்கிறது.

வார நாளான வெள்ளிக்கிழமையில் படம் ரிலீஸ் ஆகி இருந்தாலும் வசூலில் ஜெயித்திருக்கிறது. விடுதலை படத்தின் ஒட்டுமொத்த நேற்றைய வசூல் மட்டும் 4. 5 கோடியாகும். இதில் தமிழகத்தில் மட்டும் இரண்டரை கோடி வசூல் செய்திருக்கிறது. முதல் நாளிலேயே இந்த வசூல் என்பது மிகப்பெரிய சாதனையாகத்தான் பார்க்கப்படுகிறது.

Also Read:விடுதலை பார்ட் 2-வில் ஹீரோ சூரி இல்ல.. கிளைமேக்ஸை வேற லெவலில் செதுக்கியிருக்கும் வெற்றிமாறன்

நடிகர் சிம்புவின் பத்து தல திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எட்டு கோடியாகும். இதில் பாதிக்கு பாதி வசூலை வாரி விட்டது விடுதலை திரைப்படம். ஒரு காமெடி நடிகராக இருந்தும் இந்த படத்தில் சூரி தன்னுடைய கடின உழைப்பின் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

வார இறுதி நாட்களான இந்த இரண்டு நாட்களில் வசூல் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் வெற்றிமாறன் மீண்டும் ஒருமுறை தன்னுடைய திரைக்கதையில் ஜெயித்திருக்கிறார். படத்தில் நடித்த நடிகர்களும் தங்களுடைய எதார்த்தமான நடிப்பினால் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

Also Read:முக்கியமான இந்த 7 காரணங்கள்.. மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய வெற்றிமாறனின் விடுதலை

- Advertisement -

Trending News