ரிலீஸுக்கு முன்னரே செம பிசினஸ் செய்யும் வெற்றிமாறன்.. 4 மணி நேர படத்திற்கு போட்ட பலே திட்டம்

வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார். காமெடி நடிகர் சூரி இந்த திரைப்படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனால் இந்த திரைப்படம் எப்போது வெளிவரும் என்று அவருடைய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பல மாதங்களாக இந்த படத்தின் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் இன்னும் காலதாமதமாகும் என்று கூறப்படுகிறது.

ஏனென்றால் இத்திரைப்படத்தை வெற்றிமாறன் இரண்டு பாகங்களாக வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார். முதலில் இந்த கதை ஒரே பாகமாக தான் வெளியாக இருந்தது. ஆனால் படத்தின் காட்சிகள் நீளமாக இருப்பதால் அதை இரண்டு பாகங்களாக பிரித்து வெளியிடுவதற்கு பட குழு தயாராகி வருகிறது.

அந்த வகையில் இதுவரை நான்கரை மணி நேரம் ஓடும் அளவிற்கு காட்சிகள் தயார் செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள காட்சிகளை 40 நாட்களில் விரைந்து முடிப்பதற்கு வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். அதனால் படத்திறப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு ஏற்கனவே அதிகபட்ச எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது இரண்டு பாகங்களாக இப்படம் வெளிவர இருப்பதால் தயாரிப்பாளர் இதை பக்காவாக பிசினஸ் செய்யும் முடிவில் இருக்கிறார். அந்த வகையில் ஒரு பெரிய நிறுவனத்திடம் இவர் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கு இந்த படத்தை விலை பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் முழு படமும் தயாரானதும் இந்த பிசினஸை இன்னும் அதிகரிக்கவும் தயாரிப்பாளர் பிளான் போட்டுள்ளார். இதனால் விடுதலை திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மிகப்பெரிய அளவில் லாபம் பார்த்துள்ளது. அந்த வகையில் தயாரிப்பாளர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பட குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது.

Next Story

- Advertisement -