வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

வடசென்னை காம்போவில் உருவாகும் வெப் சீரிஸ்.. சம்பவம் செய்ய போகும் வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறனின் படைப்புகள் அனைத்துமே ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்து வருகிறது. தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே வெற்றிமாறன் கொடுத்து வருகிறார். இப்போது சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை படத்தை எடுத்துள்ளார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது. பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை இவர்களது காம்போவில் வெளியான படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. இதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்றால் வடசென்னை.

Also Read : வெற்றிமாறனுடன் மோகன் ஜி-யை கம்பேர் பண்ணாதீங்க.. ஜாதி பூசலுக்கு சரியான பதிலடி!

சென்னையில் முக்கிய இடங்களில் ஒன்றான வடசென்னையில் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் தனுஷை காட்டிலும் அமீரின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இப்போது அமீர் மற்றும் வெற்றிமாறன் மீண்டும் கூட்டணி போட்டுள்ளனர்.

அதாவது நிலமெல்லாம் ரத்தம் என்ற வெப் தொடரில் இவர்கள் இணைந்துள்ளனர். இதில் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் இந்தத் தொடரின் தயாரிப்பு மற்றும் கதை வெற்றிமாறன். நிலமெல்லாம் ரத்தம் தொடரின் பணிகள் இப்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாம்.

Also Read : வெற்றிமாறனுடைய பெரிய மைனஸ்.. தலையில் துண்டை போடவைக்கும் படுபாதக செயல்

மேலும் இந்த தொடர் ஜீ 5 ஓடிடி தளத்திற்காக உருவாகி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பே இந்த கூட்டணி உருவாக இருந்த நிலையில் வெற்றிமாறன் வேறு படங்களில் பிசியானதால் இந்த தொடர் தள்ளிப் போனதாக சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அமீர் பேசி இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் அமீர் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளதால் கண்டிப்பாக வட சென்னை போன்ற ஒரு கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை வெற்றிமாறன் பூர்த்தி செய்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : பல வருடங்களாக ஏமாற்றிய வெற்றிமாறன்.. எல்லாத்தையும் இழந்து நொந்து நூடுல்ஸ் ஆன சூரி

- Advertisement -

Trending News