பல வருடங்களாக ஏமாற்றிய வெற்றிமாறன்.. எல்லாத்தையும் இழந்து நொந்து நூடுல்ஸ் ஆன சூரி

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருக்கக் கூடியவர் தான் வெற்றிமாறன். சினிமா துறையில் இவரின் படங்களுக்கு என்றே தனி மவுசு உள்ளது. அந்த அளவிற்கு இவரின் படங்கள் ரசிகர்களின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். இவ்வாறாக ஒரு படத்திற்காக மட்டும் சூரியை பல வருடங்களாக ஏமாற்றி இருக்கிறார்.

தற்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம் விடுதலை. ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன்பே சூரியிடம் வெற்றிமாறன் ஒரு சத்தியம் செய்து இருக்கிறார். அதில் உங்களுக்காக நான் ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளேன். அதில் நீங்கள் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று வேண்டுகோளையும் வைத்துள்ளார்.

Also Read: விடுதலை ரிலீஸுக்கு முன்பே வெளிவந்த சூரியின் அடுத்த பட டைட்டில் போஸ்டர்.. காமெடிக்கு இனி வாய்ப்பே இல்லையாம்!

இதனைத் தொடர்ந்து இயக்குனரிடம் படத்திற்கான கதையை கேட்ட சூரிக்கு படத்தின் கதை மிகவும் பிடித்து போனது. அதிலும் காமெடியனாக வலம் வந்த இவர் ஹீரோவாக பிரமோஷன் ஆக போகிறோம் என்ற சந்தோஷத்தில் இருந்திருக்கிறார். இதற்காக பல வருடங்களாக காத்துக் கிடந்தார்.

அது மட்டுமல்லாமல் கமிட் ஆகி இருந்த பல காமெடி படங்களையும் இழந்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு தகுந்தார் போல் இருந்த தனது உடல் தோற்றம், பாணி என அனைத்தையும் மாற்றினார். அதிலும் ஹீரோவிற்கு ஏற்ற உடலாக சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து தனது உடல் அமைப்பையே முற்றிலும் மாற்ற போராடினார்.

Also Read: ஆயிரக்கணக்கான பாடல்களில் இது தனித்து நிற்கும்.. மாத்தி மாத்தி புகழ்ந்து தள்ளிய வெற்றிமாறன், இளையராஜா

ஆனால் இயக்குனரோ சூரியிடம் கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டு அசுரன் படம் எடுப்பதில் பிஸியாகிவிட்டார். இத்தனை வருடங்களாக காத்துக் கிடந்த சூரி தற்பொழுது அதற்கான பலனை அனுபவித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் விடுதலை திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் இத்தனை வருடங்களாக காத்துக் கிடந்த சூரிக்கு ட்ரைலரே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படம் கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விடும் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read: மேடையில வெச்ச ஐஸ் வேலையை காட்டுது.. தனுசுக்கு தண்ணி காட்டிய வெற்றிமாறன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்