ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வடசென்னை ராஜன், டான்சிங் ரோஸ்.. கல்லா கட்ட போகும் பா ரஞ்சித், வெற்றிமாறன்

வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வரும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். ஆனால் சூர்யா தற்போது பாலா திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் அவர் அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களிலும் கமிட்டாகி கொண்டு இருக்கிறார்.

இதனால் வாடிவாசல் படத்தின் நிலை என்ன என்று புரியாத புதிராகவே இருக்கிறது. இதனால் வெற்றிமாறன் தற்போது அதிரடியாக ஒரு வெப் சீரிஸை இயக்கும் யோசனையில் இருக்கிறாராம். இவரின் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் பலத்த வரவேற்பை பெற்ற திரைப்படம் வடசென்னை.

இந்த படத்தில் ராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அமீரின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. தற்போது வெற்றிமாறன் இந்த கதாபாத்திரத்தை தான் டெவலப் செய்து வெப் தொடராக எடுக்க திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே இப்படி ஒரு பேச்சு எழுந்த நிலையில் வெற்றிமாறன் அதை செயலாக்கும் முயற்சியில் இப்போது இருக்கிறார்.

அவரைப் போலவே பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் ஒரு கதாபாத்திரத்தை வெப் தொடராக எடுக்கும் முயற்சியில் இருக்கிறாராம். ஆர்யா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதில் ஆர்யாவுக்கு நிகராக டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஷபீரின் நடிப்பும் பேசப்பட்டது. இவர் ஏற்கனவே அடங்கமறு, பேட்ட ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

தற்போது இவர் நடித்த டான்சிங் ரோஸ் என்ற கேரக்டரை தான் ரஞ்சித் வெப் சீரிஸாக எடுக்க திட்டமிட்டு வருகிறாராம். கூடிய விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த இரண்டு கதாபாத்திரங்களும் மீண்டும் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது.

- Advertisement -

Trending News