வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

வடசென்னையை மோசமாக சித்தரிக்கும் தமிழ் சினிமா.. குமுற வைக்கும் பா ரஞ்சித், வெற்றிமாறன்

தமிழ் சினிமா மீது எப்போதுமே சென்னை மக்களுக்கு ஒரு அலாதியா பிரியம் உண்டு. சென்னையில் குறிப்பாக வடசென்னை ஏரியா என்றால் மக்கள் தொகை அதிகமாக இருக்கும். எப்பொழுதுமே கூட்ட நெரிசலாக காணப்படும் வட சென்னையில் தொழில் புழக்கம் அதிகம். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் வட சென்னையில் இருந்து வந்த துணை நடிகர்கள் அதிகம் என்றே கூறலாம்.

இப்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு கலாச்சாரம் தலைதூக்கி வருகிறது. எப்பொழுதுமே சென்னையில் உள்ள ஏரியாக்களை, அதிலும் குறிப்பாக வடசென்னை பகுதிகளில் தப்புகள் நிறைய நடப்பது போல் இயக்குனர்கள் காட்டி வருகின்றனர்.

இந்த மாதிரி இயக்குனர்கள் எடுக்கும் படங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் இயக்குனர்களும் அதை கண்டுகொள்வதில்லை குறிப்பாக பா ரஞ்சித், வெற்றிமாறன் இருவரும் கையிலெடுக்கும் கதைகள் பாதிக்குப் பாதி வடச்சென்னை சார்ந்ததாகவே இருக்கிறது.

வடசென்னையை மையமாக வைத்து எடுத்த படங்கள் என்று பார்த்தால் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன, தனுஷ் நடித்த வடசென்னை மற்றும் புதுப்பேட்டை, கார்த்தி நடித்த மெட்ராஸ் போன்று நிறைய படங்கள் இருக்கிறது. இந்த படங்களில் இந்த ஏரியாக்களில் நடக்கும் தப்புகளை பெரிதும் காட்டியிருப்பார்கள்.

இப்பொழுது கூட சிவகார்த்திகேயன் நடிக்கப்போகும் படம் மாவீரன். இந்த படமும் வடசென்னை பின்னணியாக வைத்து எடுக்கும் கதையாக தெரிகிறது. இதிலும் சிவகார்த்திகேயன் ரவுடி கெட்டப்பில் தான் தோன்றுகிறார். ஆகையால் இந்தப்படமும் வடசென்னை ஏரியா பின்னணியாக இருக்கும் என்று தெரிகிறது.

இப்படி ஒரே ஏரியாவை குற்றங்கள் நிறைய நடக்கும் ஏரியாவாக தமிழ் சினிமா சித்தரிப்பது தப்பு என்று அந்த ஏரியா மக்கள் கூறிவருகின்றனர். அங்கே நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது அதை எல்லாம் எடுத்து காட்டலாமே என்றும் அறிவுரை கூறுகின்றனர்.

- Advertisement -

Trending News