அஜித்துடன் வெற்றி துரைசாமியின் நெருக்கம் ஆரம்பித்த அந்த 3 இடம்.. யாருக்கும் இல்லாத ஒன்றை செய்த AK

Vetri Duraisamy’s intimacy with Actor Ajith started at that 3 place: இன்றைய சூழலில் நெப்போட்டிஸம், வாரிசு அரசியல் ஆகியவை தலைதூக்கி உள்ள நிலையில் அரசியலே வேண்டாம் என உதறி சமூக சேவைகள் மற்றும் திரைத்துறையின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட வெற்றி துரைசாமி அவர்கள் சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்தார். இயக்குனரான வெற்றி துரைசாமி நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பர் ஆவார்.

தமிழக  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சென்னை மேயர் என அறியப்பட்ட சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமி ஆவார். அதிமுகவில்  பெரும்புள்ளியாகவும் அரசியல் செல்வாக்குடனும் இருந்தவர் சைதை துரைசாமி.

அரசியல் ஈடுபாடு இல்லாத சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி அவர்கள் வைல்டுட் லைஃப் போட்டோகிராபர் ஆகவும், சமூக அநீதிகளை எதிர்த்து அவற்றை படம்பிடித்து கூறும் இயக்குனராகவே தன்னை முன்னிறுத்திக் கொண்டார்.

Also read: அஜித் நெருக்கம் காட்டிய 4 பிரபலங்கள்.. கிளம்புங்கன்னு சொல்லியும் சுடுகாடு வரை போய் சேட்டுக்கு செஞ்ச இறுதி மரியாதை

வெற்றி துரைசாமி  தான் இயக்கிய குறும்படத்தை முதலில் இளையராஜாவிற்கு போட்டு காண்பிக்க அதில் இம்ப்ரஸ் ஆன இளையராஜா படமாக எடு என ஆலோசனை கூற அதன்படியே ரம்யா நம்பீசன், விதார்த் போன்ற நட்சத்திரங்களுடன் “என்றாவது ஒரு நாள்” படத்தை இயக்கினார். சர்வதேச திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் 43 விருதுகளை அள்ளி சாதனை புரிந்தது.

அட்வெஞ்சர்ஸ் பிரியர்களான அஜித் மற்றும் வெற்றியின் 18 ஆண்டு கால நட்பு பைக் ரைடிங்கில் ஆரம்பித்து, போட்டோகிராபி ஏரோநாட்டிக்கல் என தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதன் மூலம் நெருக்கமான நண்பர்கள் ஆயினர். வெற்றி துரைசாமியின் திருமண விழாவிற்கு முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களுடன் அஜித் மற்றும் ஷாலினி கலந்து கொண்டு புகைப்படம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

பொது இடங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும், ஏன்? பிரபலங்களின் இறுதி நிகழ்வுகளிலும் கூட கலந்துக்க தயங்கும் அஜித் அவர்கள் தன் நண்பன் இறந்த செய்தி கேட்டு துயரப்பட்டு தன் கொள்கைகளை விட்டு, இனி தன் நண்பனின் முகத்தை எப்போது காண்போம் என்ற ஆற்றாமையில்  வெற்றி துரைசாமியின் இறுதிச் சடங்கில் பங்கேற்று இருந்தார்.

Also read: அஜித் நற்குணத்தை பார்த்து அப்பா போல் அரவணைத்த நடிகர்.. அவருமே யூஸ் பண்ணிக்க நினைத்ததால் தூக்கி எறிந்த AK

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்