நடிகர் அசோகனின் மகனை பாத்து இருக்கீங்களா.. அட! இவர் நம்ம விஜய் பட வில்லன் ஆச்சே

Veteran actor Ashokan Son: தமிழ் சினிமாவில் வில்லனாக நடிப்பதற்கு என்று முன்பெல்லாம் ஒரு தனி அகராதியே இருந்தது. பாடி பில்டர் உடம்பு இருக்க வேண்டும், கத்தி சண்டை, வாள் சண்டை எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என ஏகப்பட்ட கண்டிஷன் இருந்தது.

நம்பியார் கைகளை கசக்கி கொண்டு டக்கென வாள் வீசி சிவாஜி மற்றும் எம்ஜிஆரை கலங்கடித்துக் கொண்டிருந்த காலம் அது. அப்போது ஒரு சில படங்களின் டைட்டில் கார்டுகளில் அசோகன் BA என்று ஒரு பெயர் வரும்.

BA படித்த பட்டதாரி தான் அந்த படத்தில் வில்லனாக இருப்பார். அசோகன் இறங்கி சண்டை போட்ட படங்கள் என்று பார்த்தால் ரொம்பவும் கம்மிதான். ஒரு வசனத்தை தமிழில் சொல்லிவிட்டு அப்படியே இங்கிலீஷில் சொன்னால் அது மேஜர் சுந்தர்ராஜன்.

அதே ஒரு வசனத்தை முதலில் வேகமாக சொல்லிவிட்டு, அப்படியே பொறுமையாக அழுத்தம் கொடுத்து சொன்னால் அது அசோகன். அசோகன் கோபப்பட்டால் கண்களை மூடிக்கொண்டு, முகத்தில் அத்தனை பாவனைகளையும் வரவைத்து மிரட்டி விடுவார்.

கப்பலோட்டிய தமிழன் படத்தில் ஆஸ் துரை என்னும் கேரக்டரில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றார். வல்லவனுக்கு வல்லவன், கர்ணன், அடிமைப்பெண், அன்பே வா என இவர் வில்லனாக நடித்து வெற்றி பெற்ற படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி பெற்ற இவர் தன்னுடைய 52 வது வயதில் மாரடைப்பால் இறந்துவிட்டார். இவர் இறந்த மூன்று வருடங்களிலேயே இவருடைய மனைவியும் இறந்து விட்டார். இந்த தம்பதிகளுக்கு வின்சென்ட், அமல்ராஜ் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இதில் அமல்ராஜ் இறந்துவிட்டார். அசோகனின் இரண்டாவது மகன் வின்சென்ட் தான் தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக இருக்கிறார். வின்சென்ட் அசோகன் என்னும் பெயரில் தென் இந்திய சினிமாவில் வில்லனாக மிரட்டி கொண்டிருப்பவர் தான் மறைந்த நடிகர் அசோகனின் மகன்.

அட! இவர் நம்ம விஜய் பட வில்லன் ஆச்சே

இவரை இன்னும் நன்றாக அடையாளப்படுத்த வேண்டும் என்றால் போக்கிரி படத்தில் குரு என்ற கேரக்டரில் நடித்தவர்தான் வின்சென்ட் அசோகன். அதுமட்டுமில்லாமல் அஜித்குமார் நடித்த ஆழ்வார் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

தொட்டி ஜெயா, வேலாயுதம், ஏய், சாணக்யா போன்ற படங்களிலும் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய சினிமா செய்திகள்