அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ரஜினியின் உறவு.. பல வருடங்களாக போராடியும் வாய்ப்பு கிடைக்கவில்லை

நடிகர் அஜித்குமார் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை 60 படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தன்னுடைய 61 வது படமான துணிவில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் அஜித்துடன் நடிக்கிறார்.

போனி கபூர் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் துணிவு படம் தீபாவளிக்கு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு வேலைகள் முடிவடையாத நிலையில், இப்போது வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Also Read: ஒய்.ஜி.மகேந்திரனை ட்விட்டரில் தெரிக்கவிட்ட சின்மயி.. குடியுரிமை சட்டம்.. சர்ச்சை பேச்சு

நடிகர் அஜித்துடன் பலரும் நடிக்க ஆசைப்படுகின்றனர். இதை போலவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உறவினர் ஒருவரும் அஜித்துடன் நடிக்க பல ஆண்டுகளாக ஆசைபட்டு கொண்டு இருக்கிறார். ரஜினிகாந்தின் மிக நெருங்கிய உறவினரான ஒய் ஜி மகேந்திரன் தான் அது.

ஒய் ஜி மகேந்திரன் மிக சிறந்த நாடக கலைஞர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய நண்பர். இவர் 90ஸ் களில் டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்த பரீட்சைக்கு நேரமாச்சு திரைப்படம் இவருடைய கேரியரில் முக்கியமான ஒன்று.

Also Read: அஜித் முதன் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய படம் எது தெரியுமா? தல அப்பவே அப்படி!

இப்போது ஒய் ஜி மகேந்திரன் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கந்தசாமி, தெய்வ திருமகள், வேங்கை, இரண்டாம் உலகம், தலைவா, வேலைக்காரன், ஆருத்ரா, பேட்ட, மாநாடு போன்ற படங்கள் இதில் குறிப்பிடத்தக்கவை.

கடந்த 2017 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தில் இவர் விஜயுடன் இணைந்து நடித்துவிட்டார். இந்த பைரவா திரைப்படத்தை இயக்குனர் பரதன் இயக்கினார். விஜயுடன் இணைந்து நடித்த ஒய் ஜி மகேந்திரனுக்கு அஜித்துடன் மட்டும் இன்னும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

1999 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் ஜெ சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த திரைப்படம் வாலி. இந்த படத்தில் அஜித் நடிகர் அஜித் இரட்டை வேடங்களில் அசத்தியிருப்பார். இந்த படத்தில் இருந்தே ஒய் ஜி மகேந்திரனுக்கு நடிகர் அஜித்தை பிடித்து போனது. அஜித்துடன் நடிக்கும் ஆசை அவருக்கு இன்னும் நிறைவேறவில்லை.

Also Read: அடிபட்ட அஜித்துக்காக ஒரு மண்டலம் விரதம் இருந்த பிரபல நடிகர்.. தல உடன் அப்படி ஒரு நட்பா இவருக்கு?

- Advertisement -