சூப்பர் ஸ்டார் உதவியில் ஒரு படம்.. இயக்குனர் வெங்கடேஷ் புது டெக்னிக்.. கதாநாயகி மங்காத்தா நடிகை

தமிழ் சினிமாவில் மகாபிரபு படத்தின் மூலம் இயக்குனராக வெங்கடேஷ் அறிமுகமானார். அதன் பிறகு செல்வா, நிலவே வா, பகவதி மற்றும் வெற்றி போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

அதுவும் அங்காடித்தெரு திரைப்படத்தில் இவருடைய மேனேஜர் கதாபாத்திரம்தான் படத்தில் பெரிதும் பேசப்பட்டது. அதன் பிறகு இவருக்கு ஏராளமான படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

தற்போது பல வருடங்களுக்குப் பிறகு வெங்கடேஷ் இயக்குனராக ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு ரஜினி என பெயர் வைத்துள்ளார். அதாவது ஒரு ரஜினி ரசிகனின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை மையமாகக் கொண்டு கதை களத்தை அமைத்துள்ளார். மேலும் நடுத்தரவர்க்க மனிதனின் வாழ்க்கையில் ஒரே இரவில் அவனது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை கதையாக எழுதியுள்ளார்.

vijay sathya
vijay sathya

இப்படத்தில் விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகையான கைநாத் ஆரோரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே பஞ்சாப் மொழியில் பல படங்கள் நடித்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்திற்கு ரஜினி என பெயர் வைத்துள்ளதால் படத்தில் ரஜினியை பெருமைப்படுத்தும் வகையில் காட்சிகளும் வசனங்களும் இடம்பெறும் என கூறியுள்ளார்.  இப்படம் வெளியானால் கண்டிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்கும் எனக் கூறியுள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்