ஒரு தடவை உண்மைக்காக நின்னு பாரு உன் லைஃபே மாறும்.. வெங்கட் பிரபுவின் கஸ்டடி ஆட்டம் ஆரம்பம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைத்தன்யா, கீர்த்தி செட்டி, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் தான் கஸ்டடி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதையொட்டி இப்போது அதன் பிரமோஷன் களைகட்ட தொடங்கி இருக்கிறது. அதற்காகவே பட குழுவினர் அனைவரும் தீயாக வேலை செய்து வருகின்றனர்.

அதிலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நாக சைத்தன்யாவின் கூலான பேச்சு பலரையும் வியக்க வைத்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கு திரை உலகில் பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தி உள்ளது. அதேபோன்று வெங்கட் பிரபுவின் ரசிகர்களும் இதை ஆர்வத்துடன் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர்.

Also read: லியோவை வைத்து கஸ்டடியை வியாபாரம் செய்யும் வெங்கட் பிரபு.. தல தப்புமா?

இந்நிலையில் இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அந்த வகையில் இன்று காலையிலிருந்து பரபரப்பை கிளப்பி இருந்த அந்த ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. ட்ரெய்லரின் ஆரம்பமே பயங்கர ஆக்சன் ட்ரீட்டாக இருக்கிறது.

அதைத்தொடர்ந்து பிரியாமணி, சரத்குமார், பிரேம்ஜி, கயல் ஆனந்தி என ஒவ்வொரு நட்சத்திரங்களும் எதிர்பார்ப்பை எகிற வைக்கின்றனர். மேலும் போலீசாக வரும் நாக சைதன்யா, வில்லனாக மிரட்டும் அரவிந்த்சாமி என ட்ரெய்லரில் இடம்பெற்று இருக்கும் ஒவ்வொரு காட்சியும் அனல் பறக்கிறது.

Also read: மீண்டும் மங்காத்தா ஆட வரும் வெங்கட் பிரபு.. கஸ்டடி படத்தின் ஒன்லைன் ஸ்டோரி இதுதான்!

இதற்கு பக்கபலமாக பின்னணி இசையும் தெறிக்க விடுகிறது. அந்த வகையில் ஒரு தடவை உண்மைக்காக நின்னு பாரு உன் லைஃபே மாறும் என்பது போன்ற வசனங்களும் தீயாக இருக்கிறது. இப்படி ஒரு வெறித்தனமான ட்ரெய்லரை வெளியிட்டு தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் வெங்கட் பிரபு. மாநாடு படத்தைப் போலவே இப்படமும் வேற லெவலில் கலக்கும் என ரசிகர்கள் இப்போதே கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

- Advertisement -