கிரிக்கெட் வீரரை தாஜா பண்ணும் வெங்கட் பிரபு! யுவன் மூலம் விட்ட தூது..

Venkat Prabhu who asking help for the cricketer for G.O.A.T movie shooting: இளைய தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணைந்துள்ள G.O.A.T ரசிகர்களை தாண்டி சினிமா ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் என பலருக்கும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. எப்போதும் போல் அல்லாமல்  ஜாலிக்கு கொஞ்சம் வேலி போட்டு ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட்டை  கூடுதலாக வைத்து கலவையான ஒரு படத்தை சயின்ஸ் பிக்சன் ட்ராமாவாக அரங்கேற்ற உள்ளார் வெங்கட் பிரபு.

விஜய்யின் சமீபத்திய படங்களில் சமூக அவலங்களை அலசுவதோடு அரசுக்கும் எதிராக தன்னுடைய பதிவை படங்களின் மூலம் வெளிப்படுத்துவதால் விஜய்யின் படங்களை திரையிட முடியாமல்  அரசியல் கட்சிகள் வரிந்து கட்டி நிக்க, தற்போது அரசியல் வருகையையும் அறிவித்ததால் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

ஏஜிஎஸ் தயாரிக்கும் Greatest of all time சுருக்கமாக G.O.A.T பெயரிடப்பட்ட இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன்,ஜெயராம், லைலா, சினேகா மீனாக்ஷி சவுத்ரி என முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர். இசை யுவன் சங்கர் ராஜா.

Also read: ஏஆர் ரகுமானை போல தீயாய் வேலை செய்யும் யுவன் சங்கர் ராஜா.. உங்க அக்கப்போரு தாங்கல!

தற்போது இப்படத்திற்கான சூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு வேலைகள் பாதி நிறைவடைந்த வேளையில் இலங்கையில் லொகேஷன் பார்த்து வந்துள்ளார் வெங்கட் பிரபு. இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக இலங்கை செல்ல உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சிக்கு இலங்கையில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் இலங்கை சென்று இசை கச்சேரி நடத்தியதாகவும் அதன் வாயிலாக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை சந்திக்க நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் படத்தின் கிளைமாக்ஸை இலங்கையிலுள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் படமாக்க முத்தையா முரளிதரன் மூலம் ஏற்பாடு செய்துள்ளார்கள் யுவன் மற்றும் வெங்கட் பிரபு.

மேலும் விஜய்யின் அரசியல் வருகையை பொருட்டு இலங்கையின் முக்கிய புள்ளி  மற்றும் அவரது குடும்பத்தினர் விஜய்யை காண விரும்புவதாக கூறியுள்ளனர். இவர்கள் சந்திப்பு உறுதியாகும் பட்சத்தில் விஜய்யின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது உறுதி.

Also read: கிரிக்கெட் வீரர்களை மடக்கிய 5 பாலிவுட் நடிகைகள்.. கோலி பாண்டியாவின் சொகுசு வாழ்க்கை

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்