விஜய் படம் என்ற தெனாவெட்டில் இருந்த வெங்கட் பிரபு.. கஸ்டடியால் ஒரே அடியாய் கவிழ்த்து விட்ட AGS

தற்போது எங்கு திரும்பினாலும் வெங்கட் பிரபு பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தளபதி 68 படத்தை அவர் இயக்குவது தான். சமீபத்தில் தான் இப்படம் குறித்த அறிவிப்பு ஆரவாரமாக வெளிவந்தது. அதை தொடர்ந்து வெங்கட் பிரபுவை பார்த்தாலே பத்திரிகையாளர்கள் அனைவரும் மைக்கை தூக்கிக் கொண்டு வந்து அப்டேட் கேட்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க தற்போது அவர் ரொம்பவும் மன உளைச்சலில் இருக்கிறாராம். ஏனென்றால் இப்படத்தில் மிகப்பெரும் சம்பளத்தை எதிர்பார்த்த அவருக்கு தயாரிப்பு நிறுவனம் பட்டை நாமத்தை போட்டிருக்கிறது. அதாவது மாநாடு படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபுவின் மார்க்கெட் சற்று உயர்ந்து விட்டது என்பதை மறுக்க முடியாது.

Also read: விஜய், அஜித் சினிமாவை விட்டுப் போகணும்னு ஆசைப்படும் 5 நடிகர்கள்.. ஒரே ஒரு வாய்ப்புக்காக ஏங்கும் தங்கலான்

அதைத்தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் படத்திற்காக வெங்கட் பிரபுவுக்கு 7 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் இதைவிட தெலுங்கில் அதிக சம்பளம் என்றதும் துள்ளி குதித்துக் கொண்டு அவர் அங்கு ஓடிவிட்டார். அப்படி அவர் இயக்கிய கஸ்டடி படம் சமீபத்தில் வெளிவந்து தோல்வியை தழுவியது.

இது சில விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் விஜய் படம் அவருக்கு கிடைத்தது யாரும் எதிர்பாராத ஒன்று தான். அதை அப்படியே கெட்டியாக பிடித்துக்கொண்ட வெங்கட் பிரபு இந்த படத்திற்காக 20 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் படத்திற்கே 7 கோடி தர வந்தவர்கள் விஜய் படத்திற்கு இவ்வளவு கூட தர மாட்டார்களா என்ற தெனாவெட்டுடன் அவர் இந்த சம்பளத்தை கேட்டிருக்கிறார்.

Also read: வெயிட்டான கேரக்டர்களில் நடிக்க மறுத்த 5 நடிகர்கள்.. முரளியால் தளபதிக்கு கிடைத்த மிகப்பெரிய திருப்பம்

ஆனால் நீ அந்த அளவுக்கு வொர்க் கிடையாது என்ற ரேஞ்சுக்கு ஏஜிஎஸ் நிறுவனம் 10 கோடி மட்டுமே தர முடியும் என்று செக் வைத்திருக்கிறார்கள். இதற்கு கஸ்டடி படத்தின் தோல்வியும் ஒரு முக்கிய காரணம். இப்படி வெங்கட் பிரபு ஒரு பிளான் போட்டிருக்க தயாரிப்பு தரப்பு வேறு ஒரு பிளான் போட்டு ஒரே அடியாய் அவரை கவிழ்த்து விட்டு இருக்கிறார்கள்.

இதனால் அவர் ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறாராம். பெரிய நடிகரின் படம் என்பதால் முடிந்த அளவு பொட்டியை நிரப்பி கொள்ளலாம் என்று எதிர்பார்த்த வெங்கட் பிரபு தற்போது பயங்கர கடுப்பில் உள்ளார். இருந்தாலும் தளபதி 68 வெளிவந்த பிறகு தன்னுடைய சம்பளம் பல மடங்காக உயர்ந்து விடும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் வாய்ச்சவடால் பேசி வருகிறாராம்.

Also read: அஜித்தை பழிவாங்க நயன்தாரா எடுத்த புதிய முடிவு.. கெத்தை விட்டு மாஸ் ஹீரோவிடம் கேட்ட வாய்ப்பு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்