ஒரேடியா சீரியஸ் மூடில் வெங்கட் பிரபு.. கேரியரே போய்விடும் என்ற பயத்தில் நோ பார்ட்டி பப்

Director Venkat Prabhu: பீனிக்ஸ் பறவையாக சுற்றிக் கொண்டிருந்த இயக்குனர் வெங்கட் பிரபு, எப்பொழுது விஜய் இவருக்கு கால்ஷீட் கொடுத்தாரோ, அப்போதிலிருந்து குட்டி போட்ட பூனையாக ஒரு வட்டத்துக்குள்ளே சுற்றிக் கொண்டு வருகிறார். அதாவது பெரிய நடிகர்களின் படம் என்றாலே அதிக அளவில் எக்ஸ்பெக்டேஷன் இருக்கும். அதிலும் விஜய் படம் என்றால் சொல்லவா செய்யணும்.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வெங்கட் பிரபு ரொம்பவே சீரியஸாக இருக்கிறார். அதற்காக இவருக்கு அசிஸ்டெண்டாக ஆறு பேரை வைத்துக்கொண்டு கதையே டிஸ்கஷன் செய்து செதுக்கி வருகிறார். அது மட்டுமில்லாமல் இவர்களை வெளியில் விடாமல் அவர்களுக்கு ஒரு ரூமை அமைத்துக் கொடுத்து அதிலேயே தங்க வைத்து விடுகிறார்.

Also read: விஜய்யால் குடியை மறந்த வெங்கட் பிரபு.. விக்னேஷ் சிவன் போல் தூக்கி எறிந்து விடுவார் என்ற பயம்.!

ஏன், வீட்டிற்கு விடுவதற்கு கூட யோசித்து தான் அனுப்புகிறார். அதற்கு காரணம் ஏற்கனவே தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளிய வந்த நிலையில் இருந்து ஏதாவது சீக்ரெட்கள் லீக் ஆகிக்கொண்டே இருக்கிறது. இதனால் கடுப்பாகி போன விஜய், வெங்கட் பிரபுவை கூப்பிட்டு வார்னிங் கொடுத்து இருக்கிறார். அதனால் மறுபடியும் இந்த விஷயத்தில் தவறு நடந்து விடக்கூடாது என்பதற்காக கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

மேலும் விஜய் இப்படத்திற்கான கதையை முழுமையாக கூட இன்னும் கேட்கவில்லை. வெறும் ஒன் லைன் ஸ்டோரியை மட்டும் கேட்டுவிட்டு ஓகே சொல்லி இருக்கிறார். அதற்காகவே இன்னும் பெஸ்ட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வெங்கட் பிரபு இருக்கிறார். ஆனால் இவர் எப்பொழுதுமே அதிகமாக நேரம் செலவழிப்பது பப், பார்ட்டியில் தான். இவருடைய நண்பர்களுடன் தினமும் 6 மணிக்கு மேல் குஜாலாக இருப்பதே வழக்கமாக வைத்திருக்கக் கூடியவர்.

Also read: ஹிட் படம் கொடுத்து 10 வருஷம் ஆச்சு.. விஜய் அஜித் என இயக்கியும் பெயிலியரால் நொந்து போன இயக்குனர்

அப்படிப்பட்ட இவர் இந்த அனைத்து விஷயத்துக்குமே நோ சொல்லிவிட்டு ரொம்பவே சீரியஸாக கதையை ரெடி பண்ணிக் கொண்டு இருக்கிறார். ஏனென்றால் ஒரு வேலை இந்த கதை விஜய்க்கு பிடிக்கவில்லை என்றால் நம்மளை நிராகரித்து விட்டுருவார் என்ற பயம் தான். அப்படி மட்டும் ஆகிவிட்டால் விக்னேஷ் சிவன் லிஸ்டில் சேர்ந்து விடுவோம்.

அதன் பின் நம் சினிமா கேரியரே கேள்விக்குறியாகி விடும் என பயத்தில் எப்பொழுதும் சீரியஸ் ஆகவே இருக்கிறார். இவருடைய முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பு என்ற விஷயமே இல்லாமல் இருக்கிறார் என்று இவருடைய நண்பர்கள் பலரும் கூறி வருகிறார்கள். இதற்குத்தான் ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்று சொல்வார்கள்.

Also read: மொத்தத்தில் ரூட்டை போட்டுக் கொடுத்த விஜய்.. ஜிவி பிரகாஷ், ப்ரியா பவானி சங்கர் போடும் ஆட்டம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்