ரோபோ சங்கரை விட மோசமாக மாறிய வெங்கட் பிரபு.. எலும்பும் தோலுமான புகைப்படம்

சின்னத்திரையில் அறிமுகம் ஆகி, அதன் பிறகு வெள்ளி திரையில் நகைச்சுவை நடிகராகவும் குணசத்திர கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர், திடீரென்று ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஒல்லியாக மாறிவிட்டார். அவரை விட மோசமாக தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு மாறி இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

இதில் வெங்கட் பிரபுவின் தலையில் இருக்கும் முடி எல்லாம் கொட்டி போய் எலும்பும் தோலுமாக மெலிந்து போய் இருக்கிறார். இவர் திரையுலகில் தனது 16-வது ஆண்டை பூர்த்தி செய்துள்ளதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு இருக்கின்றனர்.

Also Read: 16 வருட சினிமா வாழ்க்கையில் வெங்கட் பிரபு கொடுத்த 5 நச் படங்கள்.. சூப்பர் ஹிட் அடித்த சென்னை 28

முதலில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான வெங்கட் பிரபு தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாகவும் கேரக்டர் ரோலிலும் நடித்து வந்தார். அதன் பின் இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்த வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் கஸ்டடி படத்தின் பேக்ரவுண்ட் இசைக்காக தற்போது துபாயில் யுவன் சங்கர் ராஜாவுடன் இசை கோர்ப்பு வேலையில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது யுவன் சங்கர் ராஜாவுடன் வெங்கட் பிரபு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read: 6 மாதமாக ரோபோ சங்கருக்கு இருந்த பிரச்சனை.. சீக்ரெட்டாக நடந்த ட்ரீட்மெண்ட்

இதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஏனென்றால் எப்போதுமே புஷ்டியாக இருக்கக்கூடிய வெங்கட் பிரபு, இதில் ரொம்பவே மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமல்ல பிரபலங்கள் பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

ரோபோ சங்கரை விட மோசமாக மாறிய வெங்கட் பிரபு

venket-prabu-cinemapettai
venket-prabu-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்