வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பெரும் சிக்கலில் வெந்து தணிந்தது காடு.. உச்சகட்ட மன கஷ்டத்தில் சிம்பு

மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு சிம்புவின் கைவசம் ஏராளமான திரைப்படங்கள் இருக்கின்றன. ஆனால் மாநாடு திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட பல மாதங்கள் கடந்த பின்பும் சிம்புவின் நடிப்பில் எந்த ஒரு படமும் இதுவரை வெளியாகவில்லை.

அவரின் நடிப்பில் தற்போது மகா, வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்கள் உருவாகி கொண்டிருக்கிறது. அதில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படம் எப்போது வெளியாகும் என்று சிம்புவின் ரசிகர்கள் உட்பட பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் பட குழு தற்போது இந்த படத்தின் ரிலீஸ் செய்தியை அறிவிக்க முடியாமல் திண்டாடி வருகிறது. அதாவது சிம்பு தற்போது பர்சனல் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அவருடைய அப்பா டி ராஜேந்தருக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அதனால் அவர் தற்போது அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்கு துணையாக சிம்புவும் அங்கு இருக்கிறார். தற்போது அவருடைய கவனம் எல்லாம் தந்தையின் சிகிச்சை மேல் தான் இருக்கிறது.

இதனால் சிம்பு நடித்து வரும் படத்தின் படகுழுவினரும் சிம்பு தன்னுடைய சொந்த பிரச்சனையை முடித்துவிட்டு வந்த பிறகு மற்ற வேலைகளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும் வெந்து தணிந்தது காடு படத்திற்கு சில டப்பிங் வேலைகள் மட்டும் பாக்கி இருக்கிறதாம்.

ஆனால் சிம்பு அப்பாவின் சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய பிறகு தான் படத்திற்கு டப்பிங் பேச முடியும் என்று திட்டமிட்டமாக கூறிவிட்டாராம். இதனால் படத்தின் ரிலீஸ் இன்னும் கொஞ்ச நாள் தள்ளி போகும் நிலையும் இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெந்து அணிந்தது காடு பட குழு பெரும் சிக்கலில் தவித்து வருகிறது.

- Advertisement -

Trending News