ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மீண்டும், மீண்டும் அதே அவதாரத்தில் விஜய் சேதுபதி.. கல்லா நிரம்பினால் போதும் சாமி

விஜய் சேதுபதி என்றாலே வில்லன் நடிகர் என்று கொஞ்சம் கொஞ்சமாக பெயர் எடுத்து வருகிறார். அந்த அளவிற்கு வில்லன் அவதாரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் பேட்ட, விக்ரம், மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக மக்கள் மனதை வென்றார்.

இப்பொழுது விஜய் சேதுபதி மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறார். அதற்கும் ஒரு கணிசமான தொகையை பெற்றுக் கொள்கிறார். ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிப்பது அவருக்கு ரொம்ப பிடித்துதிருக்கிறது. ஹீரோவை விட வில்லனுக்கு அதிக சம்பளம் பெற்று வருகிறார்.

இப்பொழுது கார்த்தி நடித்து கொண்டிருக்கும் படம் சர்தார் இந்தப் படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் ரிலீஸுக்காக காத்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கார்த்தி அடுத்து ராஜுமுருகன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். அந்த படத்தில் வில்லனாக யாரை போடலாம் என்று யோசிப்பவர்களுக்கு கிடைத்தார் விஜய் சேதுபதி.

கதையை விஜய் சேதுபதியிடம் கூறியவுடன் அவருக்கு ரொம்ப பிடித்து விட்டதாம். இந்த படத்தில் ஹீரோவிற்கு நிகரான வில்லன் கதாபாத்திரமாம். அதனால் தான் விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

இப்பொழுது நிறைய வில்லன் அவதாரங்களை குறிவைத்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த விக்ரம் படம் சக்கை போடு போட்டது. இதில் வில்லனாக இவர் வருகிற காட்சிகள் எல்லாம் அபாரம். தமிழ் சினிமாவில் இருக்கும் வில்லன்கள் பஞ்சத்தை இவர் போக்கி வருகிறார் என்றே கூறலாம்.

வில்லன் மட்டுமில்லை எந்த கதாபாத்திரம் என்றாலும் இவர் நடிக்க தயங்குவதில்லை. கதைக்கு முக்கியத்துவம் இருந்தால் நடித்து விடுவார். சீதக்காதி, ஆரஞ்சு மிட்டாய், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் இவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

- Advertisement -

Trending News