விஷாலுக்கு ஆப்பு வைத்த லைக்கா.. அடிமேல் அடி வாங்கும் வீரமே வாகை சூடும்

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருப்பவர் நடிகர் விஷால். இவரின் நடிப்பில் கடைசியாக எனிமி என்ற திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து தற்போது விஷால் வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சரவணன் இயக்கியுள்ள இந்த படத்தை நடிகர் விஷால் தன் சொந்த தயாரிப்பில் தயாரித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கு தற்போது ஒரு பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

அதாவது விஷால் இந்த படத்தை தயாரிப்பதற்கு ஒரு பெரும் தொகையை லைகா நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றுள்ளார். இந்த நிறுவனம் தற்போது தமிழ் தெலுங்கு உட்பட பல திரைப்படங்களை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

தற்போது லைகா, விஷாலிடம் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டு உள்ளது. ஆனால் விஷால் தற்போது பணத்தை தர முடியாத சூழ்நிலையில் இருந்துள்ளார். இதனால் பணத்திற்கு பதிலாக ஒரு படத்திற்கு விஷால் கால்ஷீட் தர வேண்டும் என்று லைகா நிறுவனம் கேட்டுள்ளது.

இதற்கு விஷாலும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் சொன்னபடி அவர் அந்த நிறுவனத்திற்கு டேட் கொடுக்கவில்லை. இதனால் லைகா நிறுவனம் தற்போது வீரமே வாகை சூடும் திரைப்படத்தை வெளியிட தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் குறித்த தேதியில் விஷால் நடித்த திரைப்படம் வெளிவருமா என்ற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இரு தரப்பும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்