ஏஞ்சல் போல் புகைப்படத்தை வெளியிட்ட வேதிகா.. ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் மதராஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. ஆனால் இந்த படம் இவருக்கு பெரிய அளவு வெற்றி பெறாததால் இவரது நடிப்பில் அடுத்து வெளியான முனி படத்தின் மூலம்தான் பிரபலமடைந்தார்.

அதனால் பலரும் முனி படத்தில்தான் வேதிகா முதலில் நடித்தார் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னதாக ஒரு படம் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

முனி படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தாலும் அதன் பிறகு இவரது நடிப்பில் வெளியான காலை மற்றும் சக்கரகட்டி ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் மற்ற மொழி படங்களில் நடித்து வந்தார்.

vedhika
vedhika

பல வருடங்கள் கழித்து மீண்டும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தின் 4 வது பாகத்தில் நடித்தார். இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா.

தற்போது அவரது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாவ், க்யூட் மற்றும் பியூட்டிஃபுல் என பதிவு செய்து வருகின்றனர்.

- Advertisement -