வாரிசு தமிழ்நாடு கலெக்ஷன் இதுதான்.. தயாரிப்பாளர் போட்ட கணக்கு செல்லுபடியாகுமா?

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் விஜயின் வாரிசு படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதுமட்டுமின்றி நேற்று வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து வந்த விஜய் முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையை கையில் எடுத்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக குடும்ப ஆடியன்ஸ்க்கு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : மேடையில உளரும் போதே தெரிஞ்சது, வாரிசு முழுக்க முழுக்க அந்த மாதரி படம்.. குண்டத்தூக்கி போட்ட விஜய்யின் ப்ரோ!

இந்நிலையில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் வாரிசு படத்தை தமிழ்நாட்டில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் வெளியிடுகிறார். மேலும் சென்னையில் சில முக்கிய இடங்களில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. எப்போதுமே தமிழ் சினிமாவில் விஜய் தான் வசூல் மன்னனாக வலம் வருகிறார்.

ஆனால் இந்த வருடம் வாரிசுக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் வெளியாகிறது. இதனால் இரண்டு படத்தின் வசூலிலும் பாதிப்பு ஏற்படும். மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் துணிவு படத்தை உதயநிதி வெளியிடுவதால் அதிக திரையரங்குகள் இந்த படத்திற்கு ஒதுக்கப்படுகிறது.

Also Read : துணிவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறும் வாரிசு.. நாளை ட்ரெய்லரில் இருக்கும் உள்குத்து

இந்நிலையில் வாரிசு படத்திற்கு தமிழ்நாட்டு கலெக்ஷன் 90 கோடி வரும் என லலித்குமார் எதிர்பார்க்கிறார். ஏனென்றால் பெரியவர் முதல் குழந்தைகள் வரை குடும்பமாக பார்க்கும் படமாக வாரிசு படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் பல மடங்கு வசூல் செய்யும் என கணக்கிட்டு உள்ளார்.

கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. அந்தப் படத்துடன் இப்போது வாரிசை ஒப்பிட்டால் கண்டிப்பாக வசூல் குறைவாகத் தான் பெரும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் இப்போது ப்ரோமோஷன் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

Also Read : வாரிசு விழாவை புறக்கணித்த சங்கீதா, கிளம்பிய விவாகரத்து சர்ச்சை.. வெளிவந்த உண்மை காரணம்

- Advertisement -