மீண்டும் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு பிடிவாதம்.. கடுப்பில் விஜய் செய்த வேலை

ஒட்டுமொத்த திரையுலகமும் மிகவும் எதிர்பார்த்த வாரிசு, துணிவு திரைப்படங்கள் வரும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாளில் தான் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த நேரடி தாக்குதல் பலரின் சுவாரசியத்தையும் அதிகரிக்க வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அதனாலேயே இந்த ரேஸில் எந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கும் என்ற கருத்துக்களும், வாக்குவாதமும் இப்போது எழுந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க இந்த படங்களின் தயாரிப்பாளர்களான தில் ராஜூ மற்றும் போனி கபூர் இருவரும் நள்ளிரவு காட்சிக்காக மல்லு கட்டிக் கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தை வெளியிடுவது குறித்து பரபரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்று இருக்கிறது.

Also read: சென்சார் போர்டு கிளப்பிய புது பிரச்சனை.. துணிவு படத்திற்கு போட்ட தடை

அப்போது தில் ராஜு வாரிசு திரைப்படத்தை நள்ளிரவு ஒரு மணிக்கு நாங்கள் ரிலீஸ் செய்து கொள்கிறோம். நீங்கள் துணிவு படத்தை நான்கு மணிக்கு வெளியிடுங்கள் என்று கூறியிருக்கிறார். ஏனென்றால் அவர் வாரிசு படத்திற்காக எக்கச்சக்கமாக செலவு செய்திருக்கிறாராம். அதனால் ஒரு காட்சி முன்னதாக படத்தை வெளியிட்டால் ஓரளவு லாபம் பார்க்கலாம் என்பதை அவருடைய திட்டம்.

ஆனால் அதே பதிலை போனி கபூரும் கூறி இருக்கிறார். எங்களுக்கு தான் ஒரு மணி காட்சி வேண்டும் என்றும் வாரிசு 4 மணி காட்சி எடுத்துக் கொள்ளட்டும் என்றும் மல்லு கட்டி இருக்கிறார். இதுதான் இப்போது முக்கிய செய்தியாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே தில் ராஜு சில வாரங்களுக்கு முன்பு துணிவு படத்தை மட்டம் தட்டி பேசி இருந்தார்.

Also read: துணிவை தாண்டிய சஸ்பென்ஸ் வாரிசு படத்தில் உள்ளது.. எதிர்பார்ப்பை அதிகரித்த இயக்குனர்

அது மட்டுமல்லாமல் அஜித்தை விட விஜய்க்கு தான் அதிக மாஸ் இருக்கிறது என்று பேசி ரசிகர்களிடம் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டார். இந்நிலையில் அவர் மீண்டும் விதண்டாவாதமாக பேசிக் கொண்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே இருப்பதால் இந்த பிரச்சனை எங்கு போய் முடிய போகிறதோ என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் தில் ராஜு வாரிசு படத்தை 12ம் தேதி ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார். ஆனால் விஜய் அஜித்துடன் மோதியே தீர வேண்டும் என்று கண்டிஷன் ஆக கூறியதால் வேறு வழியில்லாமல் தான் இந்த தேதியை பட குழு அறிவித்திருக்கிறது. இப்படி படத்தை எடுத்து முடித்து வெளியிடுவதற்குள் பெரும் போராட்டமே நடந்து வருகிறது. இவ்வாறு போட்டா போட்டியுடன் வெளிவரும் இந்த இரண்டு படங்களும் எந்த அளவுக்கு ரசிகர்களை கவரும் என்பதை நாம் வெகுவிரைவில் தெரிந்து கொள்ளலாம்.

Also read: போர் கொடி தூக்கும் 4 தெலுங்கு சினிமா குடும்பம்.. விஜய் வளர்ச்சிக்கு ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டை

Stay Connected

1,170,287FansLike
132,026FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -