ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வாரிசு பட வெளிநாட்டு உரிமம் இத்தன கோடியா.? தயாரிப்பாளர் காட்டில் கொட்டும் மழை

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் தளபதி விஜய் தனது 66-வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இந்தப் படத்தை குறித்த ஆர்வத்தை ரசிகர்களிடம் அதிகமாக்கி உள்ளது.

இதுவரை தளபதி விஜய்யை மாஸ் ஹீரோவாகவே பார்த்துக்கொண்டிருந்த தமிழ் ரசிகர்களுக்கு வாரிசு படத்தின் மூலம் சென்டிமெண்ட் ஹீரோவாகவும் பார்க்க போகின்றனர். ஏனென்றால் இந்த படம் முழுக்க முழுக்க குடும்பத்தை மையமாக உருவாகியிருக்கும் சென்டிமெண்ட் கதை தான் என ஏற்கனவே தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வாரிசு படத்தை விரைவில் ரிலீஸ் செய்வதற்காக இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதைப்போன்று தெலுங்கு பிரபலம் ராம் சரணின் 15-ஆவது படமான RC 15 படத்தையும் தில் ராஜு தான் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு RC 15 டைட்டிலாக இருப்பதாலும் படத்திற்கு அதிகாரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் ராம் சரண் ஐஏஎஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார்.

தற்போது திரைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இந்த இரண்டு படங்களின் ஓவர்சீஸ் ரைட்ஸையும் சேர்த்து தயாரிப்பாளர் தில் ராஜு  ரூபாய் 65 கோடி கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த உரிமையை பெறுவதற்காக ஒரு சில நிறுவனங்கள் முந்திக்கொண்டு இந்த இரண்டு படங்களையும் வாங்க முயற்சிக்கின்றனர்.

இதனால் வாரிசு மற்றும் RC 15 ஆகிய இரண்டு படங்களையும் சேர்த்து குறைந்தபட்சம் ரூபாய் 60 கோடியில் ஓவர்சீஸ் ரைட்ஸ்களை விற்கப்படலாம். இதனால் இரண்டு படங்களையும் ஒரே சமயத்தில் தயாரித்த தில் ராஜு கோடிக்கணக்கில் லாபம் பார்ப்பதால் சில தயாரிப்பாளர்களுக்கு வயிறு பொசுங்குகிறது.

- Advertisement -

Trending News