நீயா நானா போட்டியில் துணிவுக்கு விட்டுக் கொடுத்த வாரிசு விஜய்.. உறுதியான ரிலீஸ் தேதி

8 வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதிக் கொள்ளும் அஜித், விஜய்யின் துணிவு மற்றும் வாரிசு போன்ற இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி எடுக்கும் இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி இணையத்தில் பரபரப்பாக ஏற்படுத்தி உள்ளது.

முதலில் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் படத்தின் வசூல் பாதிப்படையும் என்பதால் ஒரு நாள் முன்ன பின்ன ரிலீஸ் ஆகிறது என சமீபத்தில் செய்திகள் பரவியது. இப்படி நீயா நானா என போட்டி போட்டுக் கொண்டிருந்த வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களில் அஜித்தின் துணிவுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார் விஜய்.

Also Read: வாரிசு மட்டுமல்ல தளபதி 67 உடன் போட்டி போடவும் நாங்கள் ரெடி.. சுத்தி அடிக்கும் துணிவு படக்குழு

வரும் ஜனவரி 12-ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று வாரிசு படம் ரிலீஸ் ஆகிறது. அதற்கு முந்தைய தினமான ஜனவரி 11-ம் தேதி துணிவு ரிலீஸ் ஆகிறது என உறுதியான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. எனவே வாரிசு மற்றும் துணிவு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என காத்திருந்த ரசிகர்களுக்கு இப்போது, படம் வெளியாகும் தேதி உறுதியானதால் தல தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஆர்ப்பரிக்கின்றனர்.

நிச்சயம் இந்த இரண்டு படங்களுக்கும் கடும் போட்டி நிலவுவதால் டிக்கெட்டின் விலையும் தாறுமாறாக இருக்கப்போகிறது. இருப்பினும் தமிழகத்தில் விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இருப்பதால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் டிக்கெட்டை வாங்கி திரையரங்கில் படம் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Also Read: வாரிசுக்கு முன்பே வெளியாகும் துணிவு டிரெய்லர்.. திட்டம் போட்டு காய் நகர்த்தும் தயாரிப்பாளர்

ஏற்கனவே துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவை தெறிக்க விட்டிருக்கும் நிலையில் வாரிசு படத்தின் டிரைலர் ஜனவரி 4-ம் தேதியான புதன்கிழமை வெளியாக உள்ளது. எனவே எல்லாத்திலும் ஃபாஸ்ட் ஆக இருக்கும் துணிவு பட குழு படத்தையும் வாரிசுக்கு ஒரு நாள் முன்பே ரிலீஸ் ஆக்க வேண்டும் என உறுதியான முடிவை எடுத்திருக்கிறது.

இப்படி நீயா நானா என்கின்ற ரேசில் அஜித் தான் ஜெயித்திருக்கிறார். மேலும் துணிவு படத்திற்காக வாரிசு விட்டுக் கொடுத்திருப்பதாகவும் தளபதி ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர். எது எப்படியோ வாரிசு மற்றும் துணிவு போன்ற இரண்டு படங்களில் எந்த படம் பாக்ஸ் ஆபிஸை தட்டி தூக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: துணிவுக்கு முந்திய வாரிசு.. டீ கிளாஸ், கூலர்ஸ் உடன் பிரம்மாண்ட பேனர், தியேட்டரில் மாஸ் காட்டும் தளபதி

- Advertisement -