மீண்டும் இணையும் வாரிசு கூட்டணி.. தில் ராஜுக்காக எதுவும் செய்யத் துணிந்த விஜய்

விஜய் வாரிசு படத்தை முடித்த கையோடு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் வாரிசு படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் தான் பெற்றது. அதாவது இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருந்தது.

ஆனாலும் முழுக்க முழுக்க தெலுங்கு சாயலில் தான் வாரிசு படம் அமைந்திருந்தது. ஆனாலும் விஜய் டாப் ஸ்டார் என்பதால் ஓரளவு நல்ல வசூலை வாரிசு படம் பெற்றது. இதன் காரணமாக சமீபத்தில் ஹைதராபாத்தில் வாரிசு படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

Also Read : வாரிசு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்.. துணிவை விட 90 கோடி அதிகமான வசூல்

இதில் விஜய் உட்பட வாரிசு படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். தில் ராஜு இதுவரை இல்லாத அளவுக்கு அந்த விழாவில் விஜய்யை தூக்கி வைத்த கொண்டாடி பேசினார். அதேபோல் தான் விஜய்யும் யாரிடமும் காட்டாத அளவுக்கு தில்ராஜுவிடம் நெருக்கமாக பழகினாராம்.

அதாவது இந்த நெருக்கம் எல்லாம் அடுத்த படத்திற்கு தான் என்று கூறப்பட்டு வருகிறது. தில் ராஜு கேட்டால் உடனடியாக கால்ஷீட் கொடுக்க விஜய் தயாராக இருக்கிறாராம். வாரிசு படம் இணையத்தில் ட்ரோலான பிறகும் தில் ராஜு படத்தில் விஜய் சம்மதிக்க காரணம் இருக்கிறது.

Also Read : மன ரீதியாக உடைந்து போன நடிகை.. உச்சகட்ட விரக்தியில் வாரிசு பட ஹீரோயின்

அதாவது விஜய் கேட்கும் சம்பளத்தை அப்படியே கொடுக்க தில் ராஜு ரெடியாக இருக்கிறாராம். அதனால் தான் இவர்கள் இருவரும் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் வாரிசு கூட்டணியிலேயே கண்டிப்பாக அடுத்த படம் உருவாகும் என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

தில் ராஜு விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் என அடுத்தடுத்த தமிழில் உள்ள டாப் நடிகர்களை வைத்து தமிழ் சினிமாவை தன் வசப்படுத்த முயற்சி செய்கிறார். இதற்கு தளபதி விஜய்யும் உறுதுணையாக இருக்கிறார் என்பது சமீபத்தில் நடந்த வாரிசு வெற்றி விழாவின் மூலம் தெரிய வந்துள்ளது.

Also Read : 23 வருட திருமண வாழ்க்கையை முடித்து வைத்த நடிகை.. வாரிசு நடிகையின் கட்டுப்பாட்டில் இருக்கும் விஜய்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை