சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஷாலால் திருமணத்தை வெறுத்த வரலட்சுமி.. விஜய் டிவி பிரபலம் மீது வந்த திடீர் காதல்

வில்லி கதாபாத்திரம் என்றாலே கூப்பிடுங்க வரலட்சுமியை என்று சொல்லும் அளவுக்கு நெகட்டிவ் ரோலில் அவர் கலக்கிக் கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எல்லா மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் இவரின் கைவசம் ஏராளமான திரைப்படங்கள் இருக்கிறது.

இப்படி நிற்க நேரமில்லாமல் ரெக்கை கட்டி பறந்து வரும் நிலையிலும் அவருக்கு புதிதாக காதல் ஒன்று துளிர்விட்டு இருக்கிறதாம். ஆம், நம்ம நாட்டாமையின் பொண்ணு தற்போது திருமணத்திற்கு ரெடியாகி கொண்டிருக்கிறார். விஜய் டிவி பிரபலம் ஒருவரை காதலித்து வரும் அவர் எப்போது வேண்டுமானாலும் தன் திருமண அறிவிப்பை வெளியிடலாம் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

Also read: வீட்டை தேடி வந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை.. பத்ரகாளியாய் மாறி பதிலடி கொடுத்த வரலட்சுமி

ஏற்கனவே விஷாலை உருகி உருகி காதலித்த வரலட்சுமி திடீரென அவரை பிரேக் அப் செய்தார். அதைத்தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவரின் மனதையும் ஒரு இளம் ஹீரோ மாற்றி இருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சந்தோஷ் பிரதாப் தான்.

சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர் வரலட்சுமி உடன் இணைந்து கொன்றால் பாவம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. அந்தப் பட சூட்டிங்கின் போது தான் இவர்கள் இருவருக்கும் அதிக நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.

Also read: வரலட்சுமியின் கொன்றால் பாவம் எப்படி இருக்கு.? சுடச்சுட வெளிவந்த பிரிவ்யூ ஷோ ட்விட்டர் விமர்சனம்

எங்கு சென்றாலும் சேர்ந்து செல்வது, அவுட்டிங் போவது என இருவரும் தங்கள் காதலை வளர்த்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் ஷூட்டிங் முடிந்து செல்லும் போது கூட காத்திருந்து அழைத்துச் செல்வது போன்ற சம்பவங்களும் நடந்து இருக்கிறது. இதனை படக்குழுவினரும் கண்டும் காணாதது போல் நோட் செய்திருக்கின்றனர். இப்படி நெருக்கம் காட்டி வரும் இந்த ஜோடியின் காதல் விவகாரம் தற்போது அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது.

மேலும் இது நிச்சயம் திருமணத்தில் முடியும் என்றும் கூறுகின்றனர். ஏனென்றால் தற்போது வரலட்சுமிக்கு 38 வயது ஆகிவிட்டது. அதனால் அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து விட வேண்டும் என்று சரத்குமார் ஆசைப்பட்டு வருகிறார். அந்த வகையில் விஷாலிடம் ஏமாந்தது போல் இல்லாமல் இந்த முறை வரலட்சுமி தெளிவாக முடிவெடுத்து திருமண பந்தத்தில் இணைவார் என அவருக்கு நெருக்கமான நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also read: 10 வருஷத்துக்கு முன்னாடி தனுஷ், சமந்தா பல்லி மாதிரி தான் இருந்தாங்க.. கில்லி மாதிரி சொல்லி அடிச்ச வரலட்சுமி

- Advertisement -

Trending News