ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய வனிதா.. இணையத்தில் வைரலாகும் பதிவு

நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயகுமார் சர்ச்சை நாயகியாகவே வலம் வருகிறார். விஜயுடன் சந்திரலேகா படத்தில் நாயகியாக அறிமுகமான வனிதா திருமணத்திற்குப் பின்னர் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது பிக் பாஸ், குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு போன்ற ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

மூன்று திருமணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது, பிக்பாஸ் வீட்டில் சகபோட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது முதல் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வெளியே இருந்து வெளியேறியது வரை தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த வனிதா தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த வனிதா, “ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றது, முதல்வன் படம் பார்ட் 2 மாதிரி இருக்கிறது. ஸ்டாலின் எனது அப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவர். நிறைய மாற்றங்களை செய்து வருகிறார். தலைவா வேற லெவல்” என முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார்.

மேலும், நடிகர் விஜய் உடன் நடித்தது நினைவில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. விஜய்யை தளபதியாகதான் மக்களுக்கு தெரியும். ஆனால், எனக்கு அவர் ஒரு நல்ல நண்பராக, மனிதராக தெரியும். எனக்கு தடுமாற்றங்கள் வரும்போதெல்லாம், பிகில் படத்தில் அனிதா கேரக்டரிடம் விஜய் பேசும் காட்சியைப் பார்ப்பேன் என்றும் வனிதா கூறியுள்ளார்.

- Advertisement -