நாங்களே வாய மூடிக்கிட்டு இருக்கும் போது நீங்க ஏன் பேசுறீங்க? பதிலடி கொடுத்த வனிதா.

நடிகை வனிதா விஜயகுமார் குறித்து பெரிதாக அறிமுகம் தேவையில்லை. இவர் பெயரை சொன்னாலே போதும். சர்ச்சைக்கு பெயர் போன நடிகை என்றாலே அது வனிதா தான். வனிதா சர்ச்சையை தேடி செல்கிறாரா அல்லது சர்ச்சை இவரை தேடி வருகிறதா என்று தெரியவில்லை. அந்தளவிற்கு தினந்தோறும் ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர்கள் தன்னை அவமரியாதையாக நடத்தியதாக கூறி நடுவர்களை குற்றம் சாட்டி வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இதனையடுத்து நடுவர்களில் ஒருவரான நகுல் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில், வனிதா அம்மன் கெட்டப் போட்டுகொண்டு செட்டில், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தன்னை பற்றி தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது வனிதா பதிலடி கொடுத்துள்ளார். வனிதா அவரது ட்விட்டர் பக்கத்தில், “நான் என் வாழ்க்கையை பிஸியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இந்த வேலையில்லாத இடியட்களின் உளறல்களை கண்டுகொள்ள எனக்கு நேரம் இல்லை.

nakkhul jaidev
nakkhul jaidev

செட்டில் என்ன நடந்தது, அதன் பின் ஜட்ஜ்களை வைத்து மீண்டும் ஷூட் செய்து எடிட் செய்து வெளியிட்டதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எனக்கு அளிக்கப்பட்ட மார்க்கை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் ஷோவில் தொடர வேண்டாம் என நான் முடிவு செய்தேன்.

எனக்கு ஒருவருடன் பிரச்சனை வருகிறது என்றால், எங்களுக்கு நடுவில் ஏற்கனவே பிரச்சனை இருந்தது என்று அர்த்தம். அது எங்களுக்கு நடுவில் தான். நாங்கள் இருவரும் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது, மற்றவர்களும் அதை பற்றி பேசாமல், விமர்சிக்காமல் இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

திரைத்துறையில் இருக்கும் ஒருவர் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது சாதாரணமான விஷயம் தான். ஆனால் எப்போவாவது என்றால் பரவாயில்லை, எப்பவுமே என்றால் என்ன செய்வது.

- Advertisement -