ரம்யா கிருஷ்ணனிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. வனிதாவை தரைகுறைவாக ஒப்பிட்ட பிரபலம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தன்னை அவமரியாதையாக நடத்தியதாக கூறி நிகழ்ச்சியிலிருந்து நடிகை வனிதா விஜயகுமார் வெளியேறி இருந்தார். மேலும், அவர் வெளியேறியதற்கு நிகழ்ச்சியின் நடுவராக உள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

பின்னர், இந்நிகழ்ச்சிக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த வனிதா, ‘நாடா இல்லை காடா’ என்ற போட்டியில் காளி போல வேடமிட்டு ஆடினார். பின்னர் அவரது நடனம் குறித்து விமர்சனம் செய்த நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் வனிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் தன்னை மற்ற போட்டியாளர்கள் உடன் ஒப்பிட வேண்டாம் என வனிதா கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த ரம்யா கிருஷ்ணன் இது போட்டி அதெப்படி ஒப்பிடாமல் இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

vanitha-cinemapettai
vanitha-cinemapettai

இச்சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணனிடம் கேட்ட போது ‘நோ கமெண்ட்ஸ்’ என ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பேசிய நிகழ்ச்சியின் மற்றொரு நடுவரான நகுல், “வனிதாவிற்கு மற்றவர்களுடன் நாங்கள் ஒப்பிட்டது பிடிக்கவில்லை. நாங்கள் மற்றவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதை வைத்து தான் அவர்களுக்கு கமென்ட் சொன்னோம். ஆனால், அவர் அதை தவறாக புரிந்துகொண்டார்.

நாங்கள் மிகவும் தன்மையாக தான் சொன்னோம். ஆனால், வனிதா எங்களை ஒரு அசிங்கமான பெயரை சொல்லி திட்டியதாக செட்டில் இருந்தவர்கள் கூறினார்கள். என்னை விடுங்கள் செட்டில் மேடம் எவ்ளோ பெரிய ஆளு. அவர்களை இப்படி பேசலாமா. ரம்யா மேம்மிடம் வனிதா மன்னிப்பு கேக்கணும்.

இதெல்லாம் அவருக்கு புதுசு இல்லை. அவங்களை பத்தி நான் பேச கூட விரும்பல. யாரும் சேத்துல போய் விழுந்து அசிங்கப்படுத்திக்க விரும்பல. அம்மன் கெட்டப்பில் இருந்து இப்படி பச்சையா பேசி இருக்காங்க” என மிகவும் கோபமாக கூறியுள்ளார்.

- Advertisement -