பிக்பாஸ் பிரபலத்திற்கு ஜோடியாகும் வனிதா விஜயகுமார்.. மீண்டும் பத்த வச்ச வத்திக்குச்சி

கடந்த ஆறு பிக் பாஸ் சீசன்களிலேயே மிகப்பெரிய பேசுபொருளானது வனிதா விஜயகுமார் பற்றி தான். வெள்ளித்திரையில் ஆரம்ப காலத்தில் கதாநாயகியாக சில படங்களில் நடித்த வனிதாவின் சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகள் நிறைந்திருந்தது.

மேலும் தனது தந்தை விஜயகுமார் மீது தனது மகனுக்காக வனிதா வழக்கு தொடர்ந்திருந்தார். இப்படி இருக்கையில் பிக் பாஸ் மூலம் தான் வனிதாவுக்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது. இவர் பத்த வச்ச நெருப்பு பிக்பாஸில் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அதுமட்டுமின்றி இவரால் தான் பிக் பாஸில் டிஆர்பியும் எகிறியது.

Also Read : புது லுக்கில் ஷாக் கொடுக்கும் வனிதா.. ஜீன்ஸ், பாப்கட் என ஆளே மாறிய புகைப்படம்

ஆகையால் இவரை கெட்டியாக பிடித்துக்கொண்ட விஜய் டிவி அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் வனிதாவை போட்டியாளராகவும், நடுவராகவும் பங்கு பெற வைத்திருந்தனர். இந்நிலையில் பவர் ஸ்டார் உடன் ஒரு படத்தில் வனிதா நடித்திருந்தார். ஆனால் சில காரணங்களினால் இப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் வனிதா இப்போது ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளார். அதாவது வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி, தயாரித்து, நடித்து வருகிறாராம். இதில் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் பிரபலம் தாடி பாலாஜி நடிக்கிறாராம். வனிதாவை போலவே பல சர்ச்சைகளில் சிக்கியவர் தாடி பாலாஜி.

Also Read : ஆள காணோம்னு தேடக்கூடிய நிலையில் இருக்கும் 6 நடிகர்கள்.. பிக் பாஸுக்கு பின் காணாமல் போன வையாபுரி

சமீபத்தில் கூட அவரது மனைவி நித்யா மற்றும் பாலாஜிக்கு இடையே பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இப்போது வெப் சீரிஸில் வனிதாவுக்கு ஜோடியாக அவர் நடிப்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. மேலும் இந்த வெப் தொடரில் முன்னாள் பிக் பாஸ் பிரபலங்கள் நிறைய பேர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிலும் சுரேஷ் சக்கரவர்த்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். வனிதாவுக்கும், சுரேஷ் சக்கரவர்த்திக்கும் அடிக்கடி வாய்க்கால் தகராறு ஏற்படும் நிலையில் இவர்கள் ஒரே தொடரில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் இந்த தொடர் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.

Also Read : தளபதி காட்டும் நெருக்கத்தால் தலை கால் புரியாமல் ஆடும் அட்லீ.. சன் பிக்சர்ஸை கதிகலங்க வைக்கும் சம்பளம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்