பொட்டு வச்சா புருஷன் யாருன்னு கேக்குறாங்க.. புலம்பும் பிக்பாஸ் வனிதா

எப்போதுமே டிரெண்டில் இருக்கும் நடிகையாக மாறிவிட்டார் பிக்பாஸ் வனிதா. பீட்டர் பால் பிரச்சனையில் தொடங்கி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது வரை சர்ச்சையில் முன்னணி நடிகைகளையே மிஞ்சி விட்டார்.

சமீபத்தில் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தி வந்தனர். அதில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடுவராக பணியாற்றினார். மேலும் வனிதாவும் அதில் ஒரு போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் தன்னை மரியாதை குறைவாக நடத்தியதாக கூறி பாதியிலேயே வெளியேறினார் வனிதா. இதுகுறித்து ரம்யா கிருஷ்ணனுக்கு வனிதாவுக்கும் இடையில் பெரிய பஞ்சாயத்து வந்தது.

இதுகுறித்து சமீபத்தில் வனிதா கொடுத்த பேட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்குத் தான் அந்த போட்டி நடத்தப்பட்டதாகவும், ஆனால் அதில் தனக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

vanitha-cinemapettai-01
vanitha-cinemapettai-01

இந்த பிரச்சனை ஒருபுறமிருக்க சமூக வலைதளங்களில் குங்குமம் வைத்துக் கொண்டு ஒரு போட்டோ பதிவிட்டால் கூட உன்னுடைய புருஷன் யார்? என கேட்டு தொந்தரவு செய்கின்றனர். சமீபகாலமாக சமூக வலை தளங்களில் அத்து மீறல்கள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

போற போக்கில் மாதர் சங்கம் பற்றியும் ஒரு காட்டு காட்டி விட்டு சென்றுள்ளார் வனிதா. ஒரு பெண்ணான எனக்கு இவ்வளவு பிரச்சினைகள் வந்துபோகும் இந்த மாதர் சங்கம் எங்கே சென்றது என்றே தெரியவில்லை எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

- Advertisement -