போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்.. முன்னணி நடிகரின் பட வாய்ப்பை கைப்பற்றிய வனிதா

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சர்ச்சை நாயகியாக வலம் வந்த நடிகை வனிதா தற்போது சினிமாவில் பிசியாகி வருவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இவ்வளவு பஞ்சாயத்துக்கள் நடந்தும் வனிதா அசராமல் இருக்கிறாரே என மிரண்டு போயுள்ளதாம் கோலிவுட்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதாவின் சினிமா மார்க்கெட் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. எந்த மீடியா பக்கம் சென்றாலும் வனிதாவின் முகம் தான். வளைத்து வளைத்து யூடியூபிலும் பேட்டி எடுத்து பிரபலம் ஆக்கிவிட்டனர்.

இடையில் திருமண சர்ச்சைகள் எல்லாம் வந்து ஓய்ந்த பிறகு தற்போது படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் ஹரிநாடார் நடிக்கும் 2k அழகான காதல் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கிறதாம். அந்த வகையில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்த பிரசாந்த் ரீ-என்ட்ரி கொடுக்கும் அந்தகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் வனிதா.

இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் நடிகர் பிரசாந்தை டேக் செய்து சமூக வலைத்தளத்தில் வாயிலாக தான் அந்தகன் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் வனிதா விஜயகுமார்.

vanitha-andhagan
vanitha-andhagan

மேலும் சில முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகளும் வலை வீசியுள்ளாராம் வனிதா. கீர்த்தி சுரேஷ் நடித்த பாம்பு சட்டை படத்தை இயக்கிய இயக்குனரின் அனல் காற்று என்ற படத்தில் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.

- Advertisement -