படத்துல வனிதாவுடன் ஃபர்ஸ்ட் நைட் சீன் இருக்கு.. வெட்கப்பட்ட பிரபல நடிகர்

பீட்டர் பாலை எந்த நேரத்தில் திருமணம் செய்து விவாகரத்து செய்தாரோ அதிலிருந்து வனிதாவின் கொடிதான் கோலிவுட்டில் உயரப் பறந்து கொண்டிருக்கிறது. நெகடிவ் விமர்சனங்கள் இருந்தாலும் பெரிய பப்ளிசிட்டி கிடைத்து வருகிறது.

அதை வைத்து தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி கொண்டிருக்கிறார். அந்த வகையில் பிரசாந்த் ரீ-என்ட்ரி கொடுக்கும் அந்தகன், இன்னும் பெயரிடப்படாத ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில்தான் வனிதாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு வந்துள்ளது. பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அந்த படத்தின் புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் அந்த படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடந்தது. அதில் படத்தின் கதையை பற்றி சொன்ன பவர்ஸ்டார் சீனிவாசன், கமர்ஷியல் படமா? என பத்திரிகையாளர் கேட்க, பாட்டு இருக்கு, பைட் இருக்கு, ஃபர்ஸ்ட் நைட் சீன் இருக்கு என கலகலப்பாக பேசி உள்ளார்.

ஃபர்ஸ்ட் நைட் சீன் இருக்கு சொல்லும்போது அவர் வைக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இப்போது இணையத்தில் பயங்கர வைரலாக சென்று கொண்டிருக்கிறது. இந்த படத்தில் வனிதாவுக்கு வைரல் ஸ்டார் என பட்டபெயர் கொடுத்துள்ளனர்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு போட்டியாக வைரல் ஸ்டார் என்ற பட்டம் வனிதாவுக்கு கொடுத்திருப்பதாக கோலிவுட்டில் கிடைக்கின்றன. பவர் ஸ்டார் சீனிவாசன் விரைவில் ஒரு படத்தை இயக்கி நடிக்க உள்ளாராம்.

vanitha-power-star
vanitha-power-star

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -