ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

இதுவரைக்கும் முட்டாளாக இருந்துட்டேன்.. அஸ்திரத்தை கையிலெடுக்கும் வாணி போஜன்

பெரும்பாலும் முன்னணி நடிகையாக உள்ளவர்கள் தங்களது மார்க்கெட் இழந்தவுடன் சின்னத்திரை தொடர்களில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் சின்னத்துரை தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான வாணி போஜன் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

சின்னத்திரை நயன்தாராவாக வலம் வந்த வாணிபோஜனுக்கு ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் அங்கீகாரம் கிடைத்தாலும் அதன் பிறகு இரட்டை ஹீரோயின்கள் படங்களில்தான் அதிகம் நடித்துவருகிறார். சமீபத்தில் தெலுங்கில் அறிமுகமாகி மீக்கு மாதர்மே செப்தா படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் விக்ரம் நடிப்பில் உருவான மகான் படத்தில் வாணிபோஜன் நடித்திருந்தார். படத்தின் நீளம் கருதி வாணிபோஜன் நடித்த காட்சிகளை படக்குழு கட் செய்திருந்தது. இவ்வாறு வாணி போஜனுக்கு மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்தும் அது வீணாக போனது.

தற்போது வரை வாணி போஜன் கவர்ச்சி காட்டாமல் நடித்து வருவதால்தான் இவ்வாறு பட வாய்ப்புகள் பறிபோகிறது என்று எண்ணி மற்ற நடிகைகள் போல் கவர்ச்சி காட்ட இருப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் எந்த கதாபாத்திரங்களாக இருந்தாலும் நடிக்க தயார் என கூறியுள்ளார்.

சீரியலைப் போல சின்னத்திரையிலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவரலாம் என்று வாணி போஜன் நினைத்திருந்தார். ஆனால் வெள்ளித்திரையில் இதெல்லாம் செல்லுபடியாகாது என இப்போது தான் புரிந்து கொண்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனால் வாணி போஜனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு வர வாய்ப்புள்ளது. மேலும் தற்போது ஒரு வெப்சீரிஸ்லும் வாணி போஜன் நடிக்க இருக்கிறார். தற்போது வாணி போஜன் கவர்ச்சி காட்ட தயார் என சொன்ன நிலையில் இப்போதாவது வாணி போஜனுக்கு உலகம் புரிந்ததே என சக நடிகைகள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News