ப்ப்பா என்ன பொண்ணுடா.. வாணி போஜன் வீடியோவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இத்தொடரில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த வாணி போஜனுக்கு இல்லத்தரசிகளின் பேராதரவு கிடைத்தது. சின்னத்திரையில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே பிரபலமான வாணி போஜன் தற்போது வெள்ளித்திரை பக்கம் தன் கவனத்தை திசை திருப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் மூலம் வாணி போஜன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல்படமே மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஜெய்யுடன் இணைந்து டிரிப்பில்ஸ், வைபவுடன் லாக்கப், மலேசியா டூ அம்னீசியா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் விதமாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் வாணி போஜன் கவனம் செலுத்தி வருகிறார். படங்களில் மட்டும் அல்லாமல் சோசியல் மீடியா மேலும் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

vani-bhojan
vani-bhojan

அந்த வகையில் தற்போது சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை மட்டும் பதிவிடாமல், போட்டோ ஷூட் நடத்திய வீடியோவையும் மின்னலே பட பாடலுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

vani-bhojan
vani-bhojan

சிவப்பு நிற உடையில் தேவதை போல் ஜொலிக்கும் வாணி போஜனை பார்க்கும் ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -