வல்லவன் படமே ரஜினியின் சூப்பர் ஹிட் படத்திலிருந்து சுட்டதுதான்.. ஓபன் ஆக சொன்ன தயாரிப்பாளர்!

சிம்பு நடிப்பில் உருவான வல்லவன் படம் அன்றைய காலகட்டங்களில் மிகப்பெரிய வசூல் செய்த படமாகவும், சிம்பு இரண்டாவது முறையாக இயக்குனராக வெற்றி கண்ட திரைப்படமாகவும் மாறியது. அப்பேர்ப்பட்ட திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படத்தில் இருந்து சுட்டதுதான் என்றால் நம்ப முடிகிறதா.

மிக இளம் வயதிலேயே இயக்குனரான உருவெடுத்தவர் என்ற பெயரைப் பெற்றவர் சிம்பு. டி ஆர் ராஜேந்திரன் மகனாக வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் சிறு வயதிலிருந்தே நடித்து வருகிறார். சினிமாவில் பல வித்தைகளை தெரிந்து வைத்திருப்பவர்.

இதன் காரணமாக பதினெட்டு வயதிலேயே மன்மதன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் அடுத்ததாக வல்லவன் என்ற படத்தை இயக்கினார். அதுவும் சூப்பர் ஹிட் தான்.

வல்லவன் படத்தின் கதையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் அடித்த படையப்பா கதையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் இருக்கும் என சமீபத்திய பேட்டியில் வல்லவன் படத்தின் தயாரிப்பாளரை ஓபன் ஆக தெரிவித்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா. அந்த படத்தின் கதையைத் தான் அப்படியே உல்டாவாக மாற்றி வல்லவன் என்ற படத்தை எடுத்துள்ளார் சிம்பு. இப்போதும் வல்லவன் படத்தின் கதையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா கதையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்.

padayappa-cinemapettai
padayappa-cinemapettai

அந்த பக்கம் ரஜினி கதாபாத்திரத்தில் இங்கு சிம்பு, சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நயன்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரீமாசென் என ஈசியாக ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. படையப்பா படத்தில் நீலாம்பரி ரஜினியை பழிவாங்குவது போலவே வல்லவன் படத்தில் ரீமாசென் சிம்புவை பழி வாங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு நாளா இது தெரியாமல் சிம்பு படம் வேற லெவல், மாஸ் ஹிட், டைரக்ஷன்ல பின்னிட்டாரு என பல பில்டப் கொடுத்தது வீணா போச்சே என நினைக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -