வலிமை படத்தின் அறிமுக பாடலை எழுதிய பிரபல இயக்குனர்.. அப்டேட் வெளியிட்ட பிரபலம்

வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித்குமார் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்தின் சிங்கிள் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் இரண்டு ஆண்டுகளுக்குமேல் காத்திருந்தனர். இந்நிலையில் தான் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக நேற்று திடீரென வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

மோஷன் போஸ்டர் வெளியான சில மணி நேரங்களிலேயே 1.50 லட்சம் லைக்குகளை தாண்டியது. இந்தியாவிலேயே அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் மோஷன் போஸ்டர் என்ற சாதனையை வலிமை படைத்துள்ளது. இருப்பினும் இந்த மோஷன் போஸ்டர் மிகவும் மோசமாக இருப்பதாக ஒருபுறம் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் பணியாற்றியுள்ள கலைஞர்கள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. இதில் அஜித்தின் அறிமுகப்பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

vignesh shivan
vignesh shivan

இவர் ஏற்கனவே அஜித்துக்கு அதாரு அதாரு பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -