அமீர் படத்திலிருந்து வலிமை தீம் மியூசிக்கை சுட்ட யுவன் சங்கர் ராஜா.. என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க!

தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. தல அஜித் ரசிகர்களை தவிர மற்ற யாரையுமே அந்த போஸ்டர்கள் கவரவில்லை.

போதாக்குறைக்கு தல அஜித்தின் முகத்தை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்து ரசிகர்கள் உருவாக்கும் போஸ்டரை விட தரம் குறைவாகத்தான் இருந்தது. இதை உண்மையான தல ரசிகர்கள் சிலரும் சமூக வலைதளங்களில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு ஒரே ஒரு ஆறுதலாக இருந்தது யுவன் சங்கர் ராஜாவின் தீம் மியூசிக் தான். ஆனால் அதுவும் ஏற்கனவே வெளியான அமீர் படத்திலிருந்து உருவப்பட்டது என்பது தெரிந்து தல ரசிகர்கள் சோகத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர்.

அமீர் நடிப்பில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் தான் அமீரின் ஆதிபகவன். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இந்த படத்தில் ஜெயம்ரவி பகவான் என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதற்கு போடப்பட்ட பாடலைத்தான் யுவன் ஷங்கர் ராஜா அப்படியே தீம் மியூசிக் ஆக மாற்றி வலிமை படத்திற்கு போட்டுள்ளார்.

இது குறித்து பல வீடியோக்கள் தற்போது யூடியூப் தளங்களில் இரண்டையும் ஒப்பிட்டு போட்டு வருகின்றனர். அதேபோல் Bird Machine ஹாலிவுட் சிங்கிள் பாடலின் தழுவலும் உள்ளதாக கூறப்படுகிறது.

valimai-cinemapettai
valimai-cinemapettai

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -